பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 265

“நம்முடைய அம்மாள் எங்கே இருக்கிறார்கள்? ஏராளமான ஜன நடமாட்டமுள்ள இவ்வளவு பெரிய பட்டணத்தில் பட்டப் பகலில் ஒரு மனிதருக்கு மற்ற மனிதரால் அபாயம் நேர்ந்துவிடு மென்று அம்மாள் பயப்பட வேண்டிய காரணமென்ன?” என்றாள். அதைக் கேட்ட செளந்தரவல்லி அங்கு ஒரு மூலையில் கண்களை மூடியபடி மயங்கி உட்கார்ந்திருந்த பூஞ்சோலையம்மா ளிடம் சென்று. ‘அம்மா! அம்மா கோகிலா வந்துவிட்டாள்! அவளுக்கு என்ன அபாயம் நேர்ந்திருக்குமோவென்று பயந்தீர்களே! எதுவும் நேரவில்லையாம். அவள் செளக்கியமாக வந்து சேர்ந்துவிட்டாள்” என்று உரக்கக் கூறினாள். அப்பொழுதே தெளிவையடைந்து திடுக்கிட்டுத் தனது கண்களை விழித்துப் பார்த்த பூஞ்சோலையம்மாள், ‘ஆ கோகிலா வந்தாளா! எங்கே அவள்? என் புத்திக் குறைவினால் அவளை அனுப்பியதும் போதும். இன்று காலை முதல் இதுவரையில் நான் பட்ட பாடும் போதும். வயசுப் பெண்ணை அனுப்பினோமே, இது சோம்பேறிகள் நிறைந்த அயோக்கியப் பட்டணமாயிற்றே, அவள் என்ன விதமான எக்கச் செக்கத்தில் மாட்டிக் கொண்டாளோ என்று நினைக்க நினைக்க எனக்குக் குலை நடுக்கம் எடுத்துக் கொண்டது. நல்ல வேளையாக அவள் எல்லா வற்றிற்கும் தப்பி rேமமாக வந்து சேர்ந்தாளே. அதுவும் சுவாமி செயல்தான்’ என்று உற்சாகத்தோடு கூறிக் கோகிலாம்பாளின் முகத்தை வாஞ்சையோடு உற்று நோக்கினாள்.

அவ்வாறு அந்த அம்மாள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் சுந்தரமூர்த்தி முதலியார் மெதுவாக வந்து அந்தக் கும்பலில் நுழைந்து கொண்டார். அவரை உடனே உள்ளே அழைத்து வருவதற்காகவே செளந்தரவல்லி சற்று நேரத்திற்கு முன்பு சைகை செய்து ஒரு வேலைக்காரியை வெளியில் அனுப்பி வைத்தாள். அந்தச் சமயத்தில் அந்தக் கும்பவின் ஒரு பக்கத்தில் புஷ்பாவதியும் காணப்பட்டாள். கடைசியாகப் பூஞ்சோலை யம்மாள், ‘நல்ல வேளையாக அவள் எல்லாவற்றிற்கும் தப்பி rேமமாக வந்து சேர்ந்தாளே! அதுவும் சுவாமி செயல்தான்” என்று கூறி முடித்தவுடன், சுந்தரமூர்த்தி முதலியார் கணிரென்று ஒலித்த குரலில் உரக்கப் பேச ஆரம்பித்து, “ஆம், அம்மா இதை சுவாமியின் செயலென்றுதான் சொல்ல வேண்டும், இல்லா