பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 25

அவசரமாய்ப் போகவேண்டும். மறுபடி நாம் சந்திக்கும்போது சங்கதியை யெல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன்’ என்று கூறியவண்ணம் சவுக்கை எடுத்து நன்றாக வீசிக் குதிரைக்கு ஒர் அடி கொடுக்க, அது நாற்கால் பாய்ச்சலில் பிடுங்கிக்கொண்டு தெற்குத் திக்கில் ஒட ஆரம்பித்தது. மயிலாப்பூரைச் சேர்ந்தவையும், அந்த ரஸ்தாவின் ஒரமாக இருந்தவையுமான சில பங்களாக்களை யும் தெருக்களையும் கடந்து சுந்தரமூர்த்தி முதலியார் தமது பீட்டன் வண்டியை அமிதமான விசையோடு விடுத்துக்கொண்டு சென்று பத்து நிமிஷத்தில் மயிலாப்பூர் எல்லையைக் கடந்து அதற்கப்பால் கால் மைல் தூரம் சென்றார், அந்த ரஸ்தா கடற்கரையோடு மேன்மேலும் சென்று கொண்டே இருந்தது. எங்கும் தோப்புகளும், பிரம்மாண்டமான தனி மரங்களுமே மயமாய் நிறைந்திருந்தன. கடற்பக்கத்தில் விஸ்தாரமாகப் பரவிய வெண் மணல் பரப்பும், ஆகாயத்தையளாவிய அடர்ந்த பெரிய பெரிய தாழைப் புதர்களும் நிறைந்து கிடந்தன. எவ்விடத்திலும் மனிதர்கள் மறைந்திருந்து எத்தகைய அட்டுழியச் செய்கைகளை யும் கூசாமல் நடத்துவதற்கு அநுகூலமான அடர்ந்த சப்பாத்திப் புதர்களும் காணப்பட்டன. அவர்கள் சென்ற காலத்தில் ரஸ்தாவில் இரண்டு பக்கங்களிலும் வெகுதுரம் வரையில் மனிதர் காணப்படவில்லை. ஆதலால், அந்த இடம் அப்போது நிர்மானுஷ்யமானதாகவும் பயங்கரமானதாகவும் காணப் பட்டது. -

அத்தகைய தனிமையான இடத்தின் வழியாகத் தமது வண்டியை விடுத்துக்கொண்டு சென்ற சுந்தரமூர்த்தி முதலியார் இரண்டு பக்கங்களிலும், எதிரிலும் இருந்த மறைவான இடங்களையெல்லாம் கூர்மையாகவும் கவனமாகவும் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டே செல்ல, சிறிது தூரத்திற்கெதிரில் ரஸ்தாவின் ஒரமாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வண்டிகளின் பின்புறம் தெரியவே, அதைக் கண்ட மினியன், ‘நம்ப வண்டி அதோ இருக்குது எசமானே! அதுக்குப் பக்கத்துலே ஒரு பீட்டன்கூட இருக்குதே!” என்று கூறிக்கொண்டு கட்டிலடங்கா ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் துள்ளிக் குதித்தான். உடனே சுந்தரமூர்த்தி முதலியாரும் மட்டிலடங்காக் களிப்பும்