பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27Ό செளந்தர கோகிலம்

அடைந்து குன்றிப்போய் முற்றிலும் தளர்வுற்று ஓய்ந்து நின்றபடி தனது கடைக்கண்ணால் சுந்தரமூர்த்தி முதலியாரது முகத்தை ஒரு முறை பார்த்தாள். அவ்வாறு பார்த்தது அங்கிருந்த தமது ஜனங்களுக்கு முன், எந்த வரலாற்றையும் தெரிவிக்க வேண்டா மென்று அவள் அவரிடம் நயந்து வேண்டிக்கொள்வது போல இருந்தது. சுந்தரமூர்த்தி முதலியார் அதைக் கவனித்தும் கவனிக் காதவர் போலத் தமது பார்வையை வேறு பக்கத்தில் திருப்பிக் கொண்டார்.

அப்பொழுது வக்கீல் சீனிவாச முதலியார் சுந்தரமூர்த்தி முதலியாரைப் பார்த்து, “ஐயா! நீங்களும், உங்கள் தங்கையும் சொன்ன வார்த்தைகள் எங்களுடைய ஆவலைத் தணிப்பதற்குப் பதிலாக அதை அபாரமாகப் பெருக்கிவிட்டது. சங்கதியை நீங்கள் விஸ்தாரமாய்ச் சொல்லவேண்டாம். இரண்டொரு வார்த்தையில், இன்னாரால் இன்னவிதமான அபாயம் நேர்ந்தது என்பதை மாத்திரம் சொல்லிவிடுங்கள். அதைக் கேட்டுக் கொண்டு நாங்கள் வீட்டுக்குப் போகிறோம்; எங்களுக்கும் நேரமாகிறது” என்றார்.

சுந்தரமூர்த்தி முதலியார் விஷயத்தை வெளியிட விரும் பாதவர்போலத் தமது முகத்தோற்றத்தை மாற்றிக்கொண்டு சீனிவாச முதலியாரை நோக்கி, ‘இந்த ஊரில் நம்முடைய பெண்களுக்கு யாரால் அபாயம் நேரக்கூடுமென்பதை நான் சொல்லவும் வேண்டுமா? நம்முடைய துரைத்தனத்தார் மணிக் கணக்குப்படி மாமிசத்தைப் போட்டு ஊட்டி வளர்த்து ஊர்சுற்ற விட்டிருக்கும் சண்டைக் கடாக்கள் இருக்கிறார்களே. தெரியாதா?” என்றார்.

மற்றவர் யார் யார்? வெள்ளைக்கார சோல்ஜர்களா? என்று வியப்போடும் ஆவலோடும் வினவினர். சுந்தரமூர்த்தி முதலியார், ‘இல்லை. அவர்களாக இருந்தால், இந்நேரம், கோகிலாம்பாள் மறு உலகத்துக்குப் போயிருப்பது நிச்சயம். நம்முடைய கருப்பு சோல்ஜர்கள் இருக்கிறார்களல்லவா. அவர்கள் தான் சிப்பாயிகள். அவர்களிடத்தில் நம்முடைய கோகிலா கால வித்தியாசத்தினால் இன்று அகப்பட்டுக் கொண்டது. எங்கேயாவது ஒரு மிருகம் செத்துக்கிடந்தால், வெகு தூரத்திற்கு அப்பால் இருக்கும்