பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 274

கழுகிற்கு முக்கில் வியர்வை உண்டாகுமாம். அது உடனே வேட்டைக்குப் புறப்பட்டு விடுமாம். அதைப்போல எங்கே யாவது யெளவனப் பெண்ணொருத்தி தனியாக இருக்கிறா ளென்றால், அந்தச் சங்கதி எப்படியோ, நம்முடைய சண்டைக் கடாக்களுக்குத் தெரிந்து போகிறது. எப்படியாவது அவர்கள் பெண்ணை அபகரித்துக் கொண்டு போய் விடுகிறார்கள் என்று பெரிய பீடிகை போட்டுப் பேச ஆரம்பித்தார்.

அதைக்கேட்கவே, அங்கிருந்தோர் நிரம்பவும் திகிலடைந்து நடுநடுங்கிப் போய்க் கோகிலாம்பாளைப் பற்றிப் பலவகையில் சந்தேகங் கொள்ளத் தொடங்கி சுந்தரமூர்த்தி முதலியாரது வாயையே பார்த்தபடி இருந்தனர்.

உடனே சுந்தரமூர்த்தி முதலியார் கோகிலாம்பாளுக்கு நேர்ந்த அபாயத்தைப் பற்றிய வரலாற்றைக் கூறத் தொடங்கி, அவள் அன்றைய தினம் காலையில் பெட்டி வண்டியில் உட்கார்ந்து சென்ற சமயத்தில் சாரதி முருகேசனைப் போலீசார் கைதி செய்து கொண்டு போனதை தூரத்திலிருந்து பார்த்த காசாரி மினியன் தான் வண்டிக்குப் பின்னால் ஓடியதாகவும், கோகிலாம்பாள் போலீஸ் இன்ஸ்பெக்டருடைய வீட்டு வாசலில் வண்டியை விட்டிறங்கி கையில் பலகார மூட்டையோடு உள்ளே போய் வெகுநேரம் இருந்து மறுபடி வெளியில் வந்ததாகவும், தான் அதுவரையில் அவ்விடத்திலேயே இருந்து அவளை வண்டியில் வைத்து அழைத்து வந்ததாகவும், வந்தபோது தனக்கு வயிற்று வலியும் மயக்கமும் வந்தமையால், தவறாக வண்டி வெகுதூரம் தெற்கில் வந்து கோட்டைக் கடுத்த இரும்புப் பாலத்தண்டை வந்து விட்டதாகவும், அவ்விடத்தில் தான் வண்டியை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிப் பாலத்தடியில் போய் தேகபாதையை நிவர்த்தி செய்துகொண்டு கொஞ்ச நேரத்தில் தான் மேலே வந்து பார்த்ததாகவும், வண்டியும் கோகிலாம்பாளும் காணப்படவில்லை யென்றும், தான் உடனே பெருத்த பிதியும் நடுக்கமுமடைந்து பல இடங்களில் போய்த் தேடிப் பார்த்துவிட்டு ரஸ்தாவோடு தெற்கே மைலாப்பூர் வரையில் வந்து தமது பங்களாவிற்குள் நுழைந்த அந்த வரலாற்றை மினியன் தம்மிடம் வெளியிட்டதாகக் கூறிய தன்றி, உடனே தாம் கைத்துப்பாக்கியுடன் புறப்பட்டுப் போனது முதல் கோகிலாம்பாளைச் சிப்பாயிகளின் வசத்திலிருந்து மீட்டுத்