பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 - செளந்தர கோகிலம்

ஆச்சரியம் இது சிறைச்சாலையிலிருக்கிற கைதியல்லவா கோகிலாம்பாளை வரும்படி அழைத்திருக்கிறார். இது ஒன்றுக் கொன்று பொருந்தவில்லையே! சிறைச்சாலையிலிருக்கிறவர் கடிதம் எழுதினால் கோகிலாம்பாள் பலகாரத்துடன் போலீஸ் இன்ஸ்பெக்டருடைய வீட்டுக்குப் போக வேண்டிய காரண மென்ன! ராயபுரத்திலுள்ள முதலியார் ஐயாவும், திருவல்லிக்கேணி யிலுள்ள வக்கீல் ஐயாவும் கடிதம் எழுதியதாக இவர்கள் சொல்வ தென்ன! அது அம்பட்டன் வீட்டுக் குப்பையைக் கிளறுவது போலத்தான் இருக்கிறது. இது எப்படியாவது இருக்கட்டும். வீட்டுக்குப் பெரியவர்கள் செய்யும் காரியத்தில் நான் தலையிடு வது சரியல்ல. எனக்கென்ன அவ்வளவு பெரியத்தனம். நான் என்னுடைய இடத்துக்குப் போகிறேன்” என்று கூறிய வண்ணம் அந்தக் கடிதத்தை தனது அம்மாளிடம் போட்டுவிட்டு அவ்விடத்தைவிட்டு அப்பால் போய்விட்டாள். அங்கிருந்த ஜனங்கள், அந்தப் பரம விகாரமான நிலைமையில் பூஞ்சோலை யம்மாளிடத்திலாவது கோகிலாம்பாளிடத்திலாவது சமாதானங்கள் கேட்டுக் கொண்டிருக்க மனமற்றவராய் எவரிடத்திலும் சொல்லிக் கொள்ளாமல் ஒருவர் பின்னொருவராய் எல்லோரும் அவ்விடத்தைவிட்டு நழுவி வெளியில் போய்விட்டனர்.

வேலைக்காரர்களும் வெட்கிப் போய்ப் பலவிடங்களுக்கும் சென்று மறைந்து கொண்டனர். புஷ்பாவதி, கோகிலாம்பாள், பூஞ்சோலையம்மாள் ஆகிய மூவருமே அந்தக் கூடத்தில் மிஞ்சி நின்றனர்.

பூஞ்சோலையம்மாளும் கோகிலாம்பாளும் அப்படியே இடிந்து உட்கார்ந்து போய்விட்டார்கள். சகிக்க வொண்ணாத அபாரமான அவமானத்தினாலும் வெட்கத்தினாலும் அவர்களது உடம்பு குன்றி முற்றிலும் தளர்ந்து சோர்வடைந்து விழுந்து போய்விட்டது. அங்கே வந்திருந்த ஜனங்கள் இருந்ததைவிட திடீரென்று புறப்பட்டுத் தங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் அசட்டையாக அவ்விடத்தைவிட்டுப் போனதே ஆயிரம் ஈட்டிகளால் குத்தியது போலவும், தங்களை அவர்கள் கேவலம் பதர்களாக மதிப்பது போலவும், தங்களை ஜாதியினின்று விலக்கி விட்டதாய்ச் சொல்லிவிட்டுப் போனது போலவும் இருந்தது. அந்தச் சமயத்தில் அவ்விடத்தில் புஷ்பாவதி நின்றதனால்,