பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 செளந்தர கோகிலம்

வைத்துக் கொண்டு நம்முடைய பங்களாவுக்குப் போய் விடுவோம். பிறகு நமக்குப் பயமே இல்லை. நாம் உடனே தண்ணீர் முதலியவை கொடுத்து விசிறி அம்மாளுடைய மயக்கத்தைத் தெளிய வைக்கலாம்” என்றார்.

அதைக் கேட்ட மினியன், “ஆமாஞ் சாமீ. அப்பிடித்தாஞ் செய்யனுமுங்க” என்று துடியாக மறுமொழி கூறினான்.

உடனே சுந்தரமூர்த்தி முதலியார் தமது கையிலிருந்த ஏழு குழாய்ப் பிஸ்டலைத் தமது வேலைக்காரனிடம் கொடுத்து விட்டுத் தமது பலம் முழுதையும் வெளிப்படுத்தி கோகிலாம்பாளை ஒரு குழந்தையை எடுப்பதுபோலத் தூக்கி எடுத்துத் தமது மார்பின்மீது போட்டு அவளது சிரத்தைத் தமது இடது புஜத்தின்மீது சார்த்திக்கொண்டு அவ்விடத்தை விட்டு விசையாக ஓட ஆரம்பித்தார். ஆரம்பித்தவர் தமது வேலைக் காரனைப் பார்த்து, ‘'அடே! ஜாக்கிரதையாய் நான்கு பக்கங்களையும் பார்த்துக்கொண்டு வா. சிப்பாயிகள் மறுபடி வந்தாலும் வரலாம். பிஸ்டலில் இன்னும் மூன்று தோட்டாக்கள் வெடிபடாமல் இருக்கின்றன. அவர்கள் கிட்டவந்தால், தாகூரினியம் பாராமல் சுட்டுத் தள்ளிவிடு’ என்று கூறிய வண்ணம், கள்வர் ஆட்டைத் தூக்கிக்கொண்டு ஓடுவதுபோல நிரம்பவும் துரிதமாகவும் வீராவேசத்தோடும் பாய்ந்து ஓடி இரண்டு நிமிஷத்தில் ரஸ்தாவை அடைந்து, மற்றவரைக் கொண்டு பெட்டி வண்டியின் கதவைத் திறக்கச் செய்து, அதற்குள்ளிருந்த பலகையின்மீது கோகிலாம்பாளை மெதுவாகப் படுக்க வைத்துவிட்டுத் தாமும் அதற்கெதிரில் இருந்த பலகையில் உட்கார்ந்து, அவள் கீழே விழுந்துவிடாமல் தடுத்துக்கொண்டு, மினியன் அதை ஒட்டவும், தமது வேலைக்காரன் தம்முடைய பீட்டன் வண்டியை ஒட்டிக்கொண்டு வரவும் ஏற்பாடு செய்தார். உடனே பெட்டி வண்டியின் ஜன்னல்கள் மூடப் பட்டன. சிப்பாயிகள் கொணர்ந்திருந்த அவர்களுடைய பீட்டன் வண்டியை அசட்டையாக விட்டுவிட்டனர். மற்ற வண்டிகள் இரண்டும் அடுத்த நிமிஷம் புறப்பட்டு மயிலாப்பூரை நோக்கி விசையாய்ச் செல்லத் தொடங்கி கால் நாழிகை நேரத்தில் சந்தரமூர்த்தி முதலியாரது பங்களாவை அடைந்தன. மூவரும்