பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 செளந்தர கோகிலம்

உருக்கமும் காட்டி, ‘கோகிலம் பயப்படாதே! முரடர்கள் எல்லோரையும் நாங்கள் அடித்துத் துரத்தி விட்டோம். நீ இப்போது சமுத்திரக் கரையில் இல்லை. இது என்னுடைய சொந்த பங்களா. இனி பயம் ஒன்றுமில்லை. உன்னுடைய சொந்த பங்களாவில் இருப்பது போலவே நீ எண்ணிக் கொள்ளலாம். இதோ இருப்பவர்கள் என்னுடைய வேலைக் காரிகள்; எல்லோரும் நம்முடைய ஜாதியர்கள். உனக்கு என்னென்ன செளகரியங்கள் வேண்டுமோ அவைகளை இவர்கள் உடனே செய்து கொடுப்பார்கள். வேண்டியதைச் செய்துகொள் என்று கூறினார்.

அவரது சொற்களைக் கேட்கவே, கோகிலாம்பாளின் திகில் விலகியது. அவளது உடம்பில் நடுக்கமும் குறைந்தது. எதிர் பாராமல் தனக்கு நேர்ந்த பெரிய அபாயம் விலகியது என்ற எண்ணம் உண்டாகவே, அவளது மனம் தனது இயற்கையான திடத்தை அடைந்தது. அவளது மயக்கமும் சோர்வும் நீங்க ஆரம்பித்தன. அவள் நன்றாகத் தனது கண்களைத் திறந்து கொண்டு பார்த்தாள். தனது தங்கையை மணக்கப்போகிறவரான சுந்தரமூர்த்தி முதலியாரது பங்களாவில் தான் இருந்ததையும், அவருக்கெதிரில் தான் படுத்திருந்ததையும் உணரவே அவளது மனத்தில் சகிக்கவொண்ணாத கிலேசமும் நாணமும் எழுந்து வதைக்கலாயின. தனக்கு அன்று காலையிலிருந்து அதுவரையில் நேர்ந்த சம்பவங்களில் அவர் எவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருப்பாரோ என்ற எண்ணமும், அவர் தன்னைப் பற்றி எவ்விதமான அபிப்பிராயம் கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணமும் எழுந்து அவளை அபாரமாக வருத்த ஆரம்பித்தன. அவர் தனக்கெதிரில் நிற்கையில் தான் படுத்திருந்தது ஒழுக்கத் தவறென்று நினைத்த பெண்மணி உடனே சரேலென்று எழுந்து உட்கார்ந்து ஸோடாவை விட்டுக் கீழே இறங்கவும் எத்தனித்தாள். அதைக் கண்ட வேலைக்காரிகள், ‘அம்மா! ஏன் எழுந்திருக் கிறீர்கள்? இப்படியே இன்னம் கொஞ்ச நேரம் சாய்ந்து கொண்டிருங்கள். இதோ திண்டு போடுகிறோம். அதில் மெதுவாய்ச் சாய்ந்து கொண்டிருங்கள். உடம்பு சரியான நிலைமைக்கு வந்தவுடனே எழுந்திருக்கலாம்” என்று மிகுந்த