பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 செளந்தர கோகிலம்

இவர்கள் அப்படியே செய்வார்கள்’ என்று மிகுந்த மன நெகிழ்வோடு நயந்து கூறினார்.

அவரது குழைவான சொற்களைக் கேட்ட பெண்மணி அவளற்ற நாணமும் கிலேசமும் அடைந்தாள். தான் உடனே அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுத் தனது பங்களாவிற்குப் போய்விடவேண்டுமென்ற எண்ணமும் பதைப்பும் அவளது மனத்தில் எழுந்து தூண்டின. ஆனாலும், தனது மானமும் பிராணனும் போகக்கூடிய நிலைமையில் தோன்றித் தன்னைக் காப்பாற்றி அழைத்து வந்து தனது விஷயத்தில் மிகுந்த பிரியமும் பாசமும் கொண்டு நிரம்பவும் மரியாதையாகவும் அருமையாகவும் தன்னை உபசரிப்பவரான சுந்தரமூர்த்தி முதலியாரது மனம் வருந்தும்படி, தான் நடந்துகொள்வது தகாத செய்கையென்று நினைத்ததன்றி, அவர் தன் விஷயத்தில் செய்த பேருதவியைத் தான் உணர்ந்ததை இரண்டொரு வார்த்தையில் வெளியிட வேண்டுமென்றும் நினைத்துத் தனக்கருகில் இருந்த வேலைக் காரிகளை நோக்கி, ‘எனக்கு இன்றைய தினம் நேர்ந்த பிரமாதமான அபாய சமயத்தில் ஐயா வந்திராவிட்டால், இந் நேரம் நான் எமன் உலகத்துக்குப் போய்ச் சேர்ந்திருப்பேன். ஐயா தான் இன்று தெய்வம்போல வந்து என்னைக் காப்பாற்றினார்கள். எனக்கு இப்போது உடம்பில் கெடுதல் ஒன்றுமில்லை; உடம்பு நல்ல மாதிரியாகவே இருக்கிறது. நான் காலையில் எங்கள் பங்களாவை விட்டுப் புறப்பட்டு வெகு நேரமாகிறது. நான் திரும்பி வீட்டுக்கு வரவில்லையே என்று நினைத்து என் தாயார் நிரம்பவும் கவலைப்பட்டுக் கொண்டிருப் பார்கள். என்னை ஒரு வண்டியில் வைத்து மெதுவாகப் புரசைப்பாக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டால் பெருத்த உபகாரமாய் இருக்கும் என்று ஐயாவிடம் சொல்லுங்கள்’ என்று நிரம்பவும் பணிவாகவும் மிருதுவாகவும் கூறினாள். அவள் வேலைக்காரிகளைப் பார்த்துப் பேசினாலும், அவளது சொற்கள் முதலியாரது செவிக்கும் எட்டின. வீணாகானம் போலவிருந்த அவளது இனிய குரலொலியைக் கேட்டு ஆநந்தபரவசம் அடைந்தவராய் இளைய ஜெமீந்தார் முன்னிலும் பன்மடங்கு அதிக உருக்கமாகவும் வாஞ்சையாகவும் பேசத் தொடங்கி,