பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 35

‘கோகிலம் உங்கள் பங்களாவுக்குப் போகவேண்டுமென்று நீ ஏன் இவ்வளவு அவசரப்படுகிறாய்? இது யாருடைய பங்களா என்று நினைத்துக்கொண்டாய்! இதையும் நீ உன்னுடைய சொந்த பங்களாவாய் ஏன் நினைத்துக் கொள்ளக்கூடாது? நீ சாதாரணமாக அங்கே இருந்தால் நான் லக்ஷம் தடவை வந்து அழைத்தாலும், நீ இங்கே வரக்கூடியவளா? ஏதோ கடவுள் செயலால் நீ இங்கே வந்திருக்கிறாய். நீ இங்கே வருவதற்குமுன், உனக்கு நேர்ந்த அபாயத்தைக் குறித்து நான் நிரம்பவும் விசனம் கொள்ளுகிறேன். ஆனாலும், அந்த முகாந்திரத்தினால், நீ இங்கே வந்ததை நான் எங்களுக்கு எந்த ஜென்மத்திலும் கிடைக்காத பெருத்த பாக்கியமாக மதித்து, நான் அடைந்து கொண்டிருக்கும் ஆநந்தத்திற்கும் குதுகலத்திற்கும் அளவே சொல்லி முடியாது. சந்தோஷத்தினால் என் மனம் அப்படியே பொங்கிக் கூத்தாடு கிறது. என் தங்கச்சி புஷ்பாவதி இந்தச் சமயத்தில் இங்கே இல்லை என்ற குறைதான் என் மனசைப் புண்படுத்துகிறது. அவள் மாத்திரம் இப்போது இங்கே இருந்தால், நீ இங்கே வந்திருப்பதைப்பற்றி, அவள் அப்படியே குதித்து ஆநந்தக் கூத்தாடுவாள். என் தங்கச்சியை நான் இதுவரையில் வேறே யாருடைய வீட்டிலும் ஒரு நிமிஷம் கூட விட்டுவைத்ததில்லை. அவள் கலியாணமாகாத பெண். அவளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பியது மற்றவருக்குத் தெரிந்தால், எங்களைப் பற்றி எல்லோரும் துாஷணையாகப் பேசுவார்கள். நான் அவளை உங்கள் பங்களாவில் இந்த இரண்டு தினங்களாய் விட்டுவைக்க வில்லையா? யாரைப்பற்றி நான் அவளை அங்கே விட்டிருக் கிறேன்? உங்களிடம் எங்கள் மனசில் ஏற்பட்டுப் போயிருக்கும் அளவிட முடியாத பிரியத்தினாலும், மதிப்பினாலும் எங்களை மறந்து நாங்கள் உங்கள் பொருட்டு எந்தக் காரியத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். உங்கள் பொருட்டு நாங்கள் எங்கள் உயிரைக்கூடக் கொடுத்துவிடுவோம். கொஞ்ச நேரத்துக்குமுன் மினியன் ஓடிவந்து, வண்டியோடு ரஸ்தாவில் இருந்த உன்னைக் கானோமென்று சொல்வி, என்னை உதவிக்கு அழைத்தவுடன், என் உயிர் அப்படியே துடித்துப் போய்விட்டது. உடனே நான் பறந்துகொண்டு வந்தேன். கடற்கரையில் உன்னை அவமானப்படுத்த எத்தனித்த முரட்டுச் சிப்பாயிகளைக்