பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 செளந்தர கோகிலம்

கண்டால், வேறே யாரும் துணிந்து அவர்களிடம் நெருங்கவும் மாட்டார்கள் அவர்களை எதிர்க்கவும் துணிய மாட்டார்கள். வேறே யாருக்காவது இப்பேர்ப்பட்ட அபாயம் நேர்ந்திருக்கு மானால், நான்கூட அசட்டையாக விட்டுத் தலைமறைவாகப் போய் அப்பால் நழுவி இருப்பேன். இந்த உலகத்தில் என்னுடைய மனமார்ந்த பிரியத்தையும் வாஞ்சையையும் கவர்ந்துகொண்டவர்கள் நீ, உன் தாயார், உன் தங்கை ஆகிய மூவருமே. உங்கள் மூவரில் உன்னையே நான் ஹிருதய கமலத்தில் உச்ச ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன். அதுபற்றியே நான் இந்த அபாயத்தில் என் உயிரையும் பாராமல் வந்து விழுந்து உன்னைத் தப்ப வைத்து மீட்டுக்கொண்டு வந்தேன். ஐந்து சிப்பாயிகளுக்குமுன் நான் ஒருவன் தனியாக நின்று அவர்களை ஜெயித்தது அரிதினும் அரிதான காரியம். அந்தத் தனிமையான இடத்தில், வேறே யாரும் துணிந்து அவர்களை எதிர்க்கமாட்டார்கள். வந்தது வரட்டுமென்று துணிந்து விழுந்து நான் உன்னைக் கொண்டுவந்தேன். இல்லாவிட்டால், இந்நேரம், நீ சொல்லுகிறது போல, உன் மானமும் போயிருக்கும், உன் பிராணனும் போயிருக்கும். அப்பேர்ப்பட்ட மகா பயங்கரமான நிலைமையிலிருந்து தப்பி வந்தவளான நீ இன்று முழுதும் இவ்விடத்திலேயே நிம்மதியாகப் படுத்திருந்து விட்டுப் போவதே சரியான காரியம். அதை விட்டு நீ உடனே வீட்டுக்குப் போக வேண்டுமென்று அவசரப்படுகிறாயே! அதைக் கேட்க என் மனம் எவ்வளவு அதிகமாய்ச் சங்கடப்படும் என்பதைக் கூட நீ எண்ண வில்லையே! இதோ என் பங்களாவில் டெலிபோன் எந்திரம் இருக்கிறது. உங்கள் பங்களாவிலும் டெலிபோன் இருக்கிறது. நான் இதன் மூலமாய் உங்கள் பங்களாவிலிருக்கும் என் தங்கையோடு பேசி, நீ rேமமாய் இருக்கிறாயென்றும், இன்று மாலை வரையில் உன்னை இங்கே வைத்திருந்து கொண்டுவந்து விடுவதாகவும், மற்ற வரலாற்றையும் உன் தாயாரிடம் சொல்லி அவர்கள் கவலைப்படாமல் இருக்கச் சொல்லும்படியும் அவளிடம் கொஞ்சநேரத்துக்கு முன்புதான் சொன்னேன். உன் தாயார் உன்னைத் தேடிக்கொண்டு பட்டணத்திற்குப் போயிருப்பதாக வும், அவர்கள் திரும்பி வந்தவுடனே இந்த வரலாற்றைச்