பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 37

சொல்லி அவர்களைச் சாந்தப்படுத்தி வைப்பதாகவும் அவள் மறுமொழி சொன்னாள். நீ இப்பொழுது போனால் கூட உன் தாயார் வீட்டில் இல்லை. ஆகையால், நீ அவர்களுடைய கவலையைப் போக்க முடியாது. அவர்கள் போய் உன்னைத் தேடக் கூடிய இடத்திலெல்லாம் தேடிவிட்டுத் திரும்பி வந்த பிறகு தான் நீயும் அவர்களைப் பார்க்க நேரும். அம்மாள் போகக் கூடிய இடம் இன்னதென்பதை உன் தங்கையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அவ்விடத்திற்கு ஒர் ஆளை அனுப்பச் சொன்னேன். உன் தங்கை தனக்கும் எந்தத் தகவலும் தெரியாதென்று சொல்லிவிட்டாளாம்; அவர்கள் எந்த இடத்திற்குப் போயிருக்கக்கூடும் என்பதை நீ சொன்னால், நான் அந்தத் தகவலை டெலிபோன் மூலமாய் என் தங்கைச்சிக்குத் தெரிவிக்கிறேன். அவள் ஆளை அனுப்பட்டும். அல்லது. நானே இங்கே இருந்து ஒர் ஆளை அந்த இடத்திற்கு அனுப்பி, நீ இங்கே வந்திருக்கிறாய் என்ற விவரத்தை அவர்களுக்குத் தெரிவித்து அவர்கள் புரசைப்பாக்கம் பங்களாவுக்குப் போய்ச் சேரும்படிச் செய்கிறேன்; நீ இப்போது இங்கே சாப்பிட்டுவிட்டு எப்படியாவது இன்று மாலை வரையில் இங்கே இருந்து போனால் தான் அது எனக்குச் சந்தோஷமாயிருக்கும். என் தங்கைச்சி மாத்திரம் உங்கள் ஜாகையில் இரண்டு தினங்களாய் இருக்கலாம். நீ மாத்திரம் இன்று மாலை வரையில் இங்கே இருக்கக்கூடாதா? எங்கள் வீட்டில் நீ சாப்பிடும்படியான சந்தோஷத்தை நாங்கள் அடையக் கூடாதா?’ என்று நிரம்பவும் கனிவாகவும் நயமாகவும் கூறினார்.

அதைக் கேட்ட பெண்மணி மிகுந்த கலக்கமும் சஞ்சலமும் அடைந்து, தான் அவருக்கு எவ்விதமான மறுமொழி கூறுவது என்பதை அறியாது சிறிதுநேரம் தத்தளித்து மெளனமாக இருந்தாள். தனது தாய் தன்னைக் காணாமல் கவலை கொண்டு தேடியலைகிறாள் என்ற செய்தி கோகிலாம்பாளின் மனத்தைப் புண்படுத்தி வதைத்தது. ஆனாலும், அவள் திரும்பி பங்களாவிற்கு வந்தவுடனே புஷ்பாவதி தனது வரலாற்றைக் கூறி அவளது திகிலையும் கவலையையும் போக்குவாள் என்ற நினைவு ஒருவித ஆறுதலை உண்டாக்கியது. மினியன் அவரது