பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 39

அவ்வாறு அவரது மனம் கோணாதபடி கோகிலாம்பாள் அவருக்கு மறுமொழி கூறினாள். ஆனாலும், தனது அன்னை தன்னைத் தேடும் பொருட்டு பங்களாவைவிட்டுப் புறப்பட்டு வெளியில் போயிருக்கிறாள் என்ற செய்தி அவளது மனத்தில் மிகுந்த கலக்கத்தையும் கவலையையும் துன்பத்தையும் உண்டாக்கத் தொடங்கியது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வஞ்சகமாய்த் தன்னை அவரது மாளிகைக்குக் கொண்டுபோன வரலாற்றைத் தனது தாயார் தெரிந்துகொள்ள ஏதுவில்லை. ஆதலால், அவள் தன்னைத் தேடிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் முதலிய இடங்களுக்குப் போய்த் தன்னைக் காணாமல் எவ்விதம் தவித்துத் தடுமாறி வருந்துகிறாளோவென்று நமது பெண்ணரசியான கோகிலாம்பாள் நினைத்து நினைத்து அதை வெளியிட மாட்டாதவளாய்த் தனக்குத்தானே சஞ்சலமடைந்து தத்தளிக்கலானாள். அதுவுமன்றி, தனது ஆருயிர் மணாளரான கண்ணபிரான் போலீசாரின் வஞ்சகச் சூழ்ச்சியை அறியாது கடிதம் எழுதிக் கொடுத்தமையால், அவர் இருக்கும் இடத்திற்குத் தான் வரலாமென்று ஆவலோடு எதிர்பார்த்து ஏக்கமும் கலக்கமும் அடைந்து வருந்தி உழன்று கொண்டிருப்பாரோ என்ற நினைவும் அந்த அருங்குண நங்கையை வதைக்கலாயிற்று. அவ்வாறு அவள் சகிக்கவொண்ணாத மனவேதனைகளுக்கு இலக்காய் நெருப்பில் கிடந்து உருகும் சருகுபோலத் துன்புற்று வாடி வதங்கித் துவண்ட வண்ணம் இருந்தாள். ஆனாலும் தனக்கு நேரிட்ட கடைசி அபாயத்திலிருந்து தன்னைக் காப்பாற்றியவரும், தனது தங்கையை மணக்கப் போகிறவரும், தன்மீது அத்யந்த பிரியமும் பிரேமையும் கொண்டுள்ளவருமான சுந்தரமூர்த்தி முதலியாரது மனம் புண்படும்படி தான் நடந்துகொள்ளக் கூடாதென்ற எண்ணத்தினால், தான் தனது மனவேதனைகளைப் பொறுத்துக்கொண்டு எப்படியாகிலும் அவ்விடத்தில் இரண்டொரு நாழிகைக்காலம் இருந்துவிட்டுப் போகவேண்டும் என்ற தீர்மானத்தோடு பல்லைக் கடித்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்தாள்.

அவளுக்கும் சுந்தரமூர்த்தி முதலியாருக்கும் நடந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த வேலைக்காரிகளுள்