பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 செளந்தர கோகிலம்

ஒருத்தி அவளை நோக்கி, “ஏன் அம்மா எழுந்து சமையல் அறைக்கே வருகிறீர்களா? அல்லது. இங்கேயே சாப்பிடுகிறீர் களா? என்று பணிவாகவும் அன்பாகவும் வினவினாள். தான் தனது கைகால்களைச் சுத்தம் செய்துகொள்ளாமல் போஜனம் செய்வதும், அந்த இடத்தில் போஜனம் செய்வதும் கோகிலாம் பாளுக்கு நிரம்பவும் அருவருப்பாகவும் அசுசியாகவும் இருந்தமையால், சமையலறைக்கே தான் வருவதாய் அந்த மடந்தை ஒப்புக்கொள்ள, வேலைக்காரிகள் இருவரும் அவளுக்குக் கைலாகு கொடுத்துத் தூக்கி மெதுவாக நடத்தி அழைத்துக் கொண்டு போயினர். அவ்விடத்தில் கோகிலாம்பாள் சகிக்கவொண்ணாத தனது மனவேதனையின் இடையில் தனது தேகத்தை ஒருவாறு சுத்தி செய்துகொண்டு வேண்டா வெறுப்பாய்த் தனது போஜனத்தை முடித்துக்கொண்டு வேலைக் காரிகளின் உதவியால் முன்னிருந்த அறைக்கு வந்து அதே லோபாவின்மேல் உட்கார்ந்து கொண்டாள். வேலைக்காரிகள் அவளுக்குப் பலவகையில் உபசரணை செய்து தாம்பூலம் போட விட்டு, சற்றுப் படுத்துத் துயிலும்படி வேண்டிக்கொள்ள, அந்தப் பெண்மணி அவ்விடத்தில் இருக்கை கொள்ளாமல் தவித்த நிலைமையில் திண்டில் சாய்ந்தபடி ஒரு நாழிகைக் காலம் அப்படியே உறங்கியபின், சிறிதளவு தெளிவடைந்து எழுந்து உட்கார்ந்துகொண்டாள். வேலைக்காரிகள் அவளைவிட்டு அகலாமல் பக்கத்திலேயே இருந்து, அவள் உறங்கி விழித்தவுடன் அவளை அன்பாக வற்புறுத்தி அவளுக்குச் சிற்றுண்டி காப்பி முதலியவைகளை வழங்கி உற்சாகமும் மகிழ்ச்சியும் உண்டாக்க யத்தனித்தனர். அதற்குள் சுந்தரமூர்த்தி முதலியார் வெளியில் சென்று மினியனுக்குத் திருப்திகரமாகச் சாப்பாடு போடச் செய்து, குடித்து அவனுடைய இஷ்டப்படி கொள்ளும்படி சொல்லி அனுப்பிவிட்டு, உள்ளே சென்று தமது போஜனத்தை முடித்துக் கொண்டு, டெலிபோன் மூலமாய்ப் புஷ்பாவதியுடன் பேசிவிட்டு கோகிலாம்பாள் இருந்த அறையண்டை வந்து அதற்கு முன் மறைந்து நின்று அவளுடன் பேசிய இடத்தை அடைந்து வேலைக்காரிகளின் பெயர்களைச் சொல்லி அழைத்து, ‘அம்மாளுக்கு உடம்பு இப்போது எப்படி இருக்கிறது?