பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 41

இப்போது தூங்குகிறார்களா விழித்துக்கொண்டிருக்கிறார்களா?” என்று நிரம்பவும் பட்சமாகவும் உருக்கமாகவும் தணிவான குரலிலும் வினவினார்.

உடனே ஒரு வேலைக்காரி, ‘அம்மாள் விழித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். உடம்பு இப்பொழுது கொஞ்சம் குணப் பட்டிருக்கிற மாதிரியாயிருக்கிறது” என்று பணிவாக மறுமொழி கூறினாள்.

உடனே சுந்தரமூர்த்தி முதலியார், ‘பலகாரம் காப்பி எல்லாம் கொண்டுவந்து கொடுத்தீர்களா?’ என்று நிரம்பவும் பரிவாக வினவினார். வேலைக்காரி, ‘ஆம், கொடுத்தேன். அம்மாள் மனம் பிடித்து எதையும் சாப்பிடவில்லை; எதையும் தொட்டுத் தொட்டுப் பார்த்துவிட்டு, சாப்பிட்டாய் விட்ட தென்று பெயர் பண்ணி விட்டார்கள்’ என்றாள்.

அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி முதலியார் சந்தோஷமாக நகைத்து, ‘ஒகோ! அவர்களுடைய பங்களாவில் நாம் அவர்களைக் கொண்டுபோய் விடவில்லையேயென்று நம்முடைய பேரில் அம்மாளுக்குக் கோபம் போலிருக்கிறது! என்ன கோகிலம்! அப்படித்தானே? என்று நிரம்பவும் விநயமாகவும் உருக்கமாகவும் கூறினார்.

அதைக் கேட்ட பெண்மணி ஒரு விதமான கிலேசமடைந்து நாணித் தவித்து வேலைக்காரிகளை நோக்கி மிருதுவாகப் பேசத் தொடங்கி, ‘'நன்றாயிருக்கிறது! எனக்குக் கோபமாவது வருகிறதாவது! இத்தனை பேரும் என்னை ஒரு பொருட்டாக மதித்து, பிரியத்தை மழையாகப் பெய்து வருந்தி உபசரிக்கிறதாவது: அதைக் கண்டு நான் கோபமடைகிறதென்றால், என்னைப் போல நன்றி விசுவாசம் அற்றவர்கள் வேறே யார் இருக்கப் போகிறார்கள்? கொஞ்ச நேரத்துக்கு முன் என் மானத்தையும் உயிரையும் காப்பாற்றியதற்கும், அதன் பிறகு எனக்கு நடக்கும் உபசரணைகளுக்கும் பதிலாக நான் உங்களெல்லோர் மேலும் கோபம் கொள்வதே சரியான மரியாதை, வாஸ்தவம்தான். நான் கோபத்தினால் எதையும் சாப்பிடவில்லை” என்று நயமாகவும் அடக்கிய மகிழ்ச்சியோடும் மறுமொழி கூறினாள்.