பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 செளந்தர கோகிலம்

உடனே சுந்தரமூர்த்தி முதலியார் குதூகலமாய்ப் பேசத் தொடங்கி, “சரி, ஒருவர்மேல் நாம் அபாரமான பிரியம் வைத்து விட்டால், அவர்கள் நம்மைக் கோபித்துக்கொள்வதும் நமக்கு இன்பமாகத்தான் இருக்கிறது. அவர்களுடைய கையால் அடிபடுவதுங்கூட மனசுக்கு ஆநந்தமாகத்தான் இருக்கும். ஆகையால், நீ என்மேல் எவ்வளவு வேண்டுமானாலும் கோபித்துக் கொள்ளலாம். கோகிலம்! அதையெல்லாம் நான் புஷ்பவருஷம் போலச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தயார். ஆனால், நீ எதையும் சாப்பிடாமல் இப்படிப் பட்டினி இருப்பதுதான் எங்கள் மனசுக்குச் சங்கடமாக இருக்கிறது. ஏன் கோகிலா என்னை நீ இன்னமும் அந்நிய மனிதனென்று எண்ணுகிறாயா?” என்றார்.

அவ்வாறு அவர் மேன்மேலும் சம்பாவிக்க எத்தனித்ததைக் கண்ட வேலைக்காரிகளுள் ஒருத்தி கோகிலாம்பாள் கவனிக்காத படி மெதுவாய் நழுவி ஏதோ முக்கியமான காரியத்தை உத்தேசித்து எங்கேயோ போகிறவள் போல அந்த அறையை விட்டு வெளியில் போய்விட்டாள்.

கோகிலாம்பாள் அதன் மர்மத்தை அப்போது உணரா தவளாய் அவள் போனதைப் பொருட்படுத்தாமல் சுந்தரமூர்த்தி முதலியார் கடைசியாகக் கூறிய சொற்களைக் கேட்டு ஒருவித இன்பமும் துன்பமும் நாணமும் அடைந்தவளாய் அவருக்குத் தான் எவ்விதமான மறுமொழி கூறுவது என்பதை அறியாது சிறிதுநேரம் தத்தளித்த பின் மிருதுவாகப் பேசத்தொடங்கி, “அப்படியெல்லாம் நான் இந்த இடத்தைப் பற்றி வித்தியாசமாக எண்ணவும் இல்லை; அதனால் வேண்டுமென்று சாப்பிடாமல் இருக்கவும் இல்லை. எப்போதும் நான் நிரம்பவும் சொற்பமாகவே சாப்பிடுகிறது வழக்கம். தவிர இந்த இரண்டு தினங்களாய் நம்முடைய குடும்பத்துக்குக் கெடுதல்களே நேர்ந்து கொண்டிருப்பதால், அவைகளால் என் மனம் நொந்துபோய் இன்னதென்று சொல்ல முடியாதபடி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவுமன்றி, கொஞ்ச நேரத்துக்குமுன் சம்பவித்த பயங்கரமான விபத்து இப்போதுதான் நடப்பதுபோல என் கண்ணுக்குமுன் அப்படியே புதிதாகத் தோன்றிக்