பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 43

கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் இருக்கும் எனக்கு ஆகாரம் வேப்பங்காய் போல இருக்கிறது. எங்கள் வீடாக இருந்தால் நான் இவ்வளவு ஆகாரங்கூடச் சாப்பிட்டிருக்க மாட்டேன். தங்கள் பேரில் நான் வைத்துள்ள அபாரமான மதிப்பினால், என் மன அருவருப்பை நான் வெளியில் காட்டாமல், தங்கள் மனம் வருந்தக்கூடாதென்று நினைத்து பிடித்த வரையில் சாப்பிட்டேன். நான் ஆகார விஷயத்தில் கபடமாக நடந்துகொண்டதாய் நினைப்பது சரியல்ல. தங்கள் பிரியப்படி நான் இங்கே இவ்வளவு நாழிகை நேரம் இருந்தாய் விட்டது. இதற்குள் இரண்டு தரம் விருந்து நடந்து போய் விட்டது. இடையில் ஒரு சின்னத் தூக்கமும் ஆய்விட்டது. இனியாவது நான் புறப்பட்டுப் போக அநுமதி கொடுக்கலாம் அல்லவா? மினியன் இருந்தால் வண்டி தயாரிக்கும் படிச் செய்தால், காலத்தில் நான் எங்கள் ஜாகைக்குப் போய்ச் சேரலாம். நான் இல்லாவிட்டால் எங்கள் வீட்டு விவகாரங்களெல்லாம் அப்படியப்படியே இருந்த இடத்தில் இருக்கும்” என்று நயமாக வற்புறுத்திக் கூறினாள்.

அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி முதலியார், மிகுதி இருந்த இன்னொரு வேலைக்காரியின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, “கெங்கம்மா! உன்னை மாத்திரம் தனியாக விட்டுவிட்டு அவள் எங்கே போனாள்?” என்றார்.

கெங்கம்மாள் நிரம்பவும் பணிவாகவும் வண்ண ஒடுக்கமாக வும் மறுமொழி கூறத் தொடங்கி, “அவள் தாகத்திற்குச் சாப்பிடப் போயிருப்பாள் போலிருக்கிறது; இப்போது வந்துவிடுவாள்’ என்றாள்.

உடனே சுந்தரமூர்த்தி முதலியார், “சரி, அப்படியானால், அவள் வந்து அம்மாளிடம் உட்கார்ந்திருக்கட்டும். நீ குதிரை லாயத்திற்குப் போய், இவர்களுடைய காசாரியைக் கூப்பிட்டு, அம்மாள் புறப்படப் போகிறார்கள் என்றும், பெட்டி வண்டியைத் தயாரித்து வைக்கும்படியும் சொல்லிவிட்டு வா’ என்றார்.

கெங்கம்மாள் அப்படியே செய்வதாக மறுமொழி கூறிய வண்ணம் உடனே எழுந்து வெளியில் போய்விட்டாள்.