பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 செளந்தர கோகிலம்

சுந்தரமூர்த்தி முதலியார் மெதுவாய்க் கனைத்துக்கொண்டு, ‘கோகிலம் எப்பேர்ப்பட்ட இடமாக இருந்தாலும் நீ தங்கக் கூடியவள் அல்லவென்பது எனக்கு நன்றாகத் தெரியும். இவ்வளவு நாழிகைக் காலம் பொறுமையோடு நீ இங்கே இருந்ததை நான் ஒரு பெரிய தவப் பயனாகக் கருதுகிறேன். இனிமேலும் நீ இவ்விடத்தில் இருக்க வேண்டுமென்று நான் உன்னிடம் கேட்டுக்கொள்வதாவது, அதைப்பற்றி உன்னை வற்புறுத்துவதாவது ஒழுங்கான காரியமல்ல. அப்படி நான் கேட்டுக்கொண்டாலும், நீ தாகவிண்யத்திற்கு அதன்படி இருக்க லாம். ஆனால், உன் மனம் வேண்டா வெறுப்பாக இருப்பதாய் உணருமேயன்றி, கொஞ்சமாவது சந்தோஷமடையவே போகிற தில்லை. உங்கள் குடும்ப நிலைமையைக் கருதி, சந்தர்ப்பம் இப்போது சரியாக இல்லை என்பதையும் நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆகையால், உன் பிரியப்படியே வண்டியை ஆயத்தப்படுத்தும்படிச் சொல்லி அனுப்பிவிட்டேன். வேலைக்காரி திரும்பி வந்தவுடன் நீ புறப்பட்டுப் போகலாம். ஆனாலும் முக்கியமான விஷயத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் உன்னிடம் தனிமையில் சொல்லவேண்டுமென்று நான் பிரியப் படுகிறேன். அதைக் கருதியே நான் வேறே யாரையும் அந்த வேலைக்கு அனுப்பாமல் இந்த வேலைக்காரியை அனுப்பினேன். நான் உன்னிடம் இன்ன விஷயத்தைப்பற்றித் தான் பிரஸ்தாபம் செய்யப்போகிறேன் என்பதை நீயே அநேகமாய் யூகித்திருப்பாய் என்று நினைக்கிறேன்” என்று நயமாகவும் வாஞ்சையாகவும் உருக்கமாகவும் கூறினார்.

அவர் வேண்டுமென்றே வேலைக்காரியை அனுப்பிவிட்டுத் தன்னிடம் ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறார் என்பதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. ஆதலால், அதைக்கேட்டு அந்த மடந்தை திடுக்கிட்டுத் திகிலும் சஞ்சலமும் அடைந்து தவிக்கலானாள். அவர் எதைக் குறித்துத் தன்னிடம் பேசுவாரோ என்பது அவளுக்கு நிச்சயப் படாமையால் அவளது மனம் அந்த ஒரு நிமிஷத்திற்குள் எண்ணாததை யெல்லாம் எண்ணி அபாரமாகத் தவித்துப் போய்விட்டது. அவள் அவருடன் துணிந்து பேசுவதற்கு முற்றிலும் அஞ்சி மெளனமாக