பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 45

இருந்தாள். அதைக் கண்ட சுந்தரமூர்த்தி முதலியார், “என்ன கோகிலம்: பேசா மடந்தை ஆய்விட்டாய்? நான் கேட்டதற்கு ஒன்றும் சொல்ல மாட்டேனென்கிறாயே! என்னோடு பேசக் கூடாதென்கிற எண்ணமா? என் மனசில் உள்ள விஷயத்தை நான் வெளியிடலாம் அல்லவா?’ என்றார்.

கோகிலாம்பாள் முற்றிலும் தயக்கமாகவும் ஹீனஸ்வரத்திலும் பேசத் தொடங்கி, “என்ன விஷயம் அது? எனக்கு எதுவும் விளங்கவில்லையே” என்று பணிவாகக் கூறினாள்.

சுந்தரமூர்த்தி முதலியார், “நான் உன்னிடத்தில் வேறே எந்த விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறேன்; ஆதியில் நான் என் தங்கை புஷ் பாவதியின் மூலமாய் உங்களுக்குச் சொல்லி அனுப்பிய சங்கதி ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

கோகிலாம்பாள் திடுக்கிட்டுக் குழம்பிப்போய்த் தத்தளித்து, “தாங்கள் எதைக் குறித்துப் பேசுகிறீர்கள் என்பது விளங்க வில்லையே! என்றாள்.

சு. முதலியார் : மகாயூகமான புத்தியுடையவளான உனக்கு அது இன்னதென்று படவில்லையா? நீ ஸ்திரீ நான் புருஷன், நான் உன்னிடத்தில் ஸ்திரீ புருஷர் விஷயத்தைப்பற்றிப் பேசலாமல், வேறே எதைப் பற்றிப் பேசப் போகிறேன்.

கோகிலாம்பாள் : என்னுடைய மனசு இப்போது நிரம்பவும் குழம்பிச் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை யில், எதுவும் எனக்கு அவ்வளவு நுட்பமாகத் தெரியவில்லை. தாங்கள் எந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறீர்கள் என்பது இப்போது எனக்குத் தெரியவில்லை. ஒரு மனிதர் ஒரு சமயம் தம் தாயாருடன் பேசுவார், இன்னொரு சமயம், சம்சாரத்தோடு பேசுவார், இன்னொரு சமயம், பெண்ணோடு பேசுவார், அடுத்த சமயம் வேலைக்காரியோடு பேசுவார். எல்லாம் ஸ்திரீ புருஷர் சம்பாஷணைதான். பொதுவாக ஸ்திரீ புருஷர் சம்பாஷணை என்றால், அதிலிருந்து எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லை. தாங்கள் தயை செய்து விஷயத்தைக் குறிப்பாகச் சொல்ல வேண்டுகிறேன்.