பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 செளந்தர கோகிலம்

சு. முதலியார் : (ஆநந்தமாக நகைத்து) பேஷ்! நன்றாகச் சொன்னாய் மகா சூrசமமான புத்தியுடையவள் என்பதை ருஜுப்படுத்த இதைவிட வேறே அத்தாகரி என்ன வேண்டும். இதைக் கண்டுதான் நான் ஆதியிலிருந்தே இந்த விஷயத்தில் ஒரே பிடிவாதமாக இருந்து வருகிறேன். நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என் மனசை அபாரமாகக் கவர்ந்து என் தீர்மானத்தையே மேன்மேலும் பலப்படுத்துகிறதேயன்றி வேறல்ல. கோகிலம்! நான் ஸ்திரிகளை ஆராய்ந்து அவர்களுடைய குணதோஷங்களையும் மனக்குணக்குகளையும் கண்டுபிடிப்பதில் நிரம்பவும் தேர்ச்சி பெற்ற நிபுணன். இந்த விஷயத்தில் என்னை விட என் தங்கைச்சி பத்துப்பங்கு அதிக புத்திசாலி. எத்தனையோ இடங்களில் எனக்குப் பெண் கொடுப்பதாகச் சொன்னார்கள். அங்கங்கு நானும், என் தங்கைச்சியும் போய்ப் பார்த்துத் தெரிந்து கொண்ட வரையில், எந்தப் பெண்ணும் திருப்திகரமாக இல்லை. ஒவ்வொருத்தியிடத்திலேயும் ஒவ்வொரு குற்றம் இருந்தது. ஆகையால், எந்த இடமும் எங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே எனக்கு இதுவரையில் கலியாணம் ஆகவில்லை யன்றி எனக்குப் பெண் கிடைக்காததனால் அல்ல. என் தங்கை, தகப்பனார் முதலியோர் எனக்குத் தகுந்தபடி சகலமான அம்சங்களிலும் குற்றமற்றவளாயிருப்பவள் இந்த உலகத்திலேயே இல்லையென்றும், எனக்கு என் ஆயிசுகாலம் முடியக் கலியாணமே ஆகப் போகிறதில்லையென்றும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். இப்போது அன்றைய தினம் நான் உன்னைப்பார்த்த பிறகும், மறுநாள் என் தங்கைச்சி உன்னைப் பார்த்த பிறகும், நான் எண்ணி இருந்தது கனவல்லவென்றும், அது அநுபவத்தில் பலிக்கக்கூடிய நினைவுதான் என்றும் நானும் மற்றவர்களும் தீர்மானித்துக் கொண்டோம். அன்றையதினம் என் தங்கைச்சி இது விஷயமாக உன் தாயாரிடத்தில் பிரஸ்தாபித்த காலத்தில், இந்த விஷயத்தை எவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்லமுடியுமோ அவ்வளவு தெளிவாகச் சொல்லி இருக்கிறாள். நான் கலியாணம் செய்துகொள்வதானால், உன்னைத்தான் செய்துகொள்ளுகிறது, இல்லையானால், உன்னை நினைத்தபடியே இருந்து என் பிராணன்ை விட்டு