பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 47

விடுகிறது என்று நான் முடிவு செய்து கொண்டிருந்தேன். அன்றைய தினம், என் தங்கை உன்னை எனக்குக் கட்டிக் கொடுக்கும்படி கேட்ட காலத்தில், அதற்கு முன்பே உன் விஷயம் முடிவாகிவிட்டதென்றும், நீ கண்ணபிரான் முதலியாரைக் கலியாணம் செய்துகொள்ளப் போகிறாயென்றும் உன் தாயார் சொன்னதன்றி, உன் தங்கை செளந்தரவல்லியம் மாளை எனக்குக் கட்டிக்கொடுப்பதாகவும் சொன்னார்கள். அப்போது இருந்த நிலைமையில் வேறே வகையில்லாது இருந்தமையால், அதற்கு ஒருவிதமாக நாங்கள் இணங்கினோம். அவள் சகலமான அம்சங்களிலும் உனக்கு ஈடு நிற்கமாட்டாள். ஆனாலும், பார்வைக்கு அவள் உன்னைப்போல இருப்பதைக் கருதியும், உங்கள் வீட்டில் சம்பந்தம் செய்துகொண்டால், அடிக்கடி உன்னைப் பார்த்து ஒருவித சந்தோஷமடையும் சந்தர்ப்பமாவது வாய்க்குமே என்பதைக் கருதியுமே முக்கியமாய் நான் உன் தங்கையைக் கட்டிக்கொள்ள அரை மனசோடு இணங்கினேன். அதன் பிறகு அந்தக் கண்ணபிரான் முதலியாருக்கும், அவரது தாயாருக்கும் கால வித்தியாசத்தினால் பல துன்பங்கள் நேர்ந்துவிட்டன. அப்படி நேர்ந்தவை நிஜமானவையோ, பொய்யானவையோ, நியாயமானவையோ, அநியாயமானவையோ அதையெல்லாம் குறித்து நாம் இப்போது பிரஸ்தாபித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பிப்பதும் சரியான காரியமல்ல. அவரைப்பற்றியும், அவருடைய தாயாரைப்பற்றியும் எல்லோரும் நிரம்பவும் இழிவாகவும் தூஷணையாகவும் பேசிப் புரளி செய்கிறார்கள். உண்மையில் அவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தாலும் இருக்கலாம். அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரங்காசு கொடுத்தாலும் வராது என்பார்கள். ஆகையால் அவர்களுக்கு வந்த அவமானமும் இழிவும் இனி எந்த நாளிலும் அழியப் போகிறதில்லை. நான் விசாரித்துத் தெரிந்துகொண்ட வரையில், கண்ணபிரான் முதலியார் இந்த வழக்கில் தப்புவது கடினமென்றும், எப்படியும் அவர் தண்டனையடைந்து விடுவார் என்றும் நிச்சயிக்க ஏதுவிருக்கிறது. அவர்களுடைய விஷயத்தில் உன் மனம் அபாரமான வாத்ஸல்யம் கொண்டு நிரம்பவும் இளகி அவர்களிடம் லயித்துப் போயிருக்கலாம். இருந்தாலும்