பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 49

அந்தச் சிப்பாயிகளால் பெரிய அபாயம் நேரிட்டதல்லவா? அந்தச் சமயத்தில் நான் உயிருக்குத் துணிந்து வந்து விழுந்திரா விட்டால், இந்நேரம் உன் மானமும் போயிருக்கும், நீ பிராணனையும் விட்டிருப்பாய். இந்தச் சமயத்தில் நான் உனக்குச் செய்த உதவி கண்ணபிரான் முதலியார் செய்த உதவிக்குக் குறைந்ததாகவா இருக்கிறது? இப்படிப்பட்ட உதவிகளைக் கருதி ஒரு ஸ்திரீ தனக்கு உதவி செய்த மனிதரைக் கட்டிக்கொள்ளுகிறதென்றால், நீ இப்போது அவரையும் கட்டிக்கொள்ளவேண்டும், என்னையும் கட்டிக்கொள்ள வேண்டும்.ஒரு ஸ்திரீக்குத் தன் ஆயுசு காலத்தில் இப்பேர்ப்பட்ட அபாயங்கள் எத்தனை நேருகின்றனவோ, அத்தனைப் புருஷர்களையும் கட்டிக்கொள்ளவேண்டுமென்று நாம் நினைப்பது பைத்தியகாரத்தனமேயன்றி வேறல்ல. ஆகையால், நீ நன்றாக யோசனை செய்து பார்ப்பாயானால், நியாயம் உனக்கே விளங்கும். இதுவரையில் நடந்தது நடந்து போய் விட்டது. அதை இவ்வளவோடு விட்டுவிடுங்கள். நாமெல்லோரும் சேர்ந்து அவருக்கு எல்லா உதவிகளையும் செய்வோம். ஆனால், நீ அவரைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்ற நினைவை மாத்திரம் தயவு செய்து மாற்றிக்கொள். உனக்கு என்னைக் கட்டிக்கொள்ள இஷடமில்லாவிட்டால் கூட அக்கறை இல்லை. நான் உன்னை வற்புறுத்தவில்லை” என்றார்.

அவர் அவ்வாறு திடீரென்று தனது கலியான விஷயத்தைப் பற்றிய பிரஸ்தாபத்தை எடுப்பார் என்று கோகிலாம்பாள் சிறிதும் எதிர்பார்த்தவளன்று. ஆதலால், அதற்குத் தான் என்ன மறுமொழி கூறுவது என்பதை அறியாது தத்தளித்தாள். அவர் தமது சுயநலத்தைக் கருதாமல், தமது நன்மையையும் தங்கள் குடும்பத்தின் கண்ணியத்தையும் கருதியே அவ்வாறு பேசுகிறார் என்ற அபிப்பிராயம் அவளது மனத்தில் தோன்றியது. ஆனாலும், அந்த விஷயத்தில் பிறர் எவ்வித அபிப்பிராயங் கொண்டாலும், அதனால் தங்களுக்கு எத்தகைய கெடுதல்கள் உண்டாவ தானாலும், தான் கண்ணபிரானைக் கலியாணம் செய்து கொள்ளும் விஷயத்தில் தனது தீர்மானத்தை வேறாக மாற்றுவது நியாயமல்ல என்ற முடிவு சிறிதும் தளர்வுறாமல் உறுதியாக

செ.கோ.iii-4