பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 செளந்தர கோகிலம்

சந்தர்ப்பம் உண்டாகப் போகிறதில்லை. இப்போது உன்னுடைய மனநிலைமை சரியாக இருக்கிறதோ இல்லையோ, இந்த விஷயத்தை நீ எப்படியும் இப்போது முடிவு கட்டியே தீர்க்க வேண்டும். எனக்கு இதில் முக்கியமான பாத்தியம் இருக்கிறது. ஆகையால், நான் உன்னிடம் இவ்வளவு அதிகமாய் உரிமை பாராட்டிப் பேசுகிறேன். அவரை நீ கட்டிக்கொள்ளப் போகிறதில்லையென்றால், அப்போது நீ என்னைக் கட்டிக் கொள்ள ஒப்புக்கொண்டவளாக இருக்கிறாய். நான் உனக்குப் புருஷன் ஆகப்போகிறவன் என்கிற உரிமையில் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச எனக்குச் சுதந்திரம் ஏற்படுகிறது. நீ என்னைக் கட்டிக்கொள்ள இணங்கவில்லையானால், அப்போது நான் உன் தங்கையைக் கட்டிக்கொள்ளப் போகிறவன் என்கிற உரிமையில், நான் இதைப் பற்றிப் பேச எனக்கு நீ சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். நான் சொல்வது தெரிந்ததா?’ என்று நிரம்பவும் உருக்கமாகவும் வற்புறுத்தியும் கூறினார். -

கோகிலாம்பாள் மிருதுவாகவும் பணிவாகவும் மறுமொழி கூறத் தொடங்கி, “நான் அறியா சிறுபெண்; இந்த விஷயம் நிரம்பவும் முக்கியமானது. வீட்டிற்குப் பெரியவர்களான என் தாயார் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த விஷயங்களை எல்லாம் தீர்மானிக்க வேண்டும். தாங்கள் சாவகாசமாய் எங்களுடைய பங்களாவுக்கு வந்தால், இந்த விஷயங்களைப் பற்றித் தாங்கள் அவர்களோடு நன்றாகக் கலந்து பேசிக் கொள்ளலாம். தாங்கள் பிரஸ்தாபிக்கும் விஷயத்தில் எவ்வித மான அபிப்பிராயமும் தெரிவிக்க எனக்கு இப்போது புத்தியும் சரியாக இல்லை; சுதந்திரமும் இல்லை. நான் தங்கள் மனப் போக்குக்கு மாறாகப் பேசுகிறேன் என்று மனவருத்தம் வைக்க வேண்டாம். தங்களுக்குக் கீழ்ப்படியாமல் நான் நடந்து கொள்வதாகவும் தாங்கள் கருதக்கூடாது’ என்று நிரம்பவும் இறைஞ்சிக் கூறினாள்.

சுந்தரமூர்த்தி முதலியார் முன்னிலும் பன்மடங்கு அதிக மன இளக்கமும் உருக்கமும் காட்டி, “என்ன கோகிலம்! இப்படி நீ எதற்கும் பிடிகொடாமல் பேசினால், நான் உன்னை என்ன