பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 53

செய்யமுடியும்? தானாகக் கனியாததைத் தடிகொண்டடித்துப் பழுக்க வைத்தால் அது எவ்வளவு சுகமாயிருக்கும் என்பதை நான் உனக்குச் சொல்ல வேண்டியதில்லை. இப்போது உனக்குச் சிப்பாயிகளால் நேர்ந்த அபாயத்திலிருந்து உன்னை நான் விடுவிக்காமல், அந்தக் கண்ணபிரான் முதலியார் விடுவித்திருந் தால், நீ அவரிடம் நடந்துகொள்வது வேறு மாதிரியாக இருக்கும் என்பது நிச்சயம். எதற்கும் மனசுதான் காரணம்; அந்த மனது, மனிதருக்கு மனிதர் வித்தியாசம் பாராட்டும் சுபாவமுடையது. ஒரு மனிதரிடத்தில் ஆயிரம் பிழைகளும் ஊழல்களும் இருந்தாலும், ஸ்திரீகளுக்கு மனசில் ஒரு பிரியம் ஏற்பட்டுப் போகுமானால், அத்தனையும் அத்தனை அழகுகளாய்த் தோன்றும். வேறொரு மனிதன் அந்த மனிதனைவிடச் சகலமான அம்சங்களிலும் மேம்பட்டவனாயிருந்தாலும், அதையெல்லாம் இந்த மன்சு சட்டை செய்கிறதில்லை. இது உலக இயல்பு. அதற்கு ஒத்தபடியே நீ நடந்து கொள்ளுகிறாய். நான் உன்னை நினைத்து நினைத்து என் உயிரையே விட்டுக்கொண்டிருக்கிறேன். உனக்காக நான் என் உடல் பொருள் ஆவி ஆகிய எல்லா வற்றையும் கொடுத்து உதவவும் எப்போதும் ஆயத்தமாய் இருக்கிறேன். அந்தக் கண்ணபிரான் முதலியாரிடம் இருக்கும் இன்ன மேம்பாடு என்னிடம் இல்லையென்று நீ எடுத்துக் காட்டுவாயானால், நான் அதையும் உன் முடிவான தீர்மானத்தை யும் ஏற்றுக் கொள்ளுகிறேன். என் விஷயத்தில், உன் மன உணர்ச்சி இன்ன மாதிரிதான் இருக்கிறது என்பதைப் பற்றிக் கடுகளவாவது நீ ஒரு கோடி காட்டாமல் மையமாகவும் சாமர்த்தியமாகவும் பேசுவதும் சரியல்ல. உன் தாயார் முதலிய பெரியோர் இந்த விஷயத்தை ஒருவிதமாக முடிவுகட்டவேண்டும் என்பது ஒருவிதத்தில் உண்மையாக இருந்தாலும், அவர்களுடைய முடிவு உன்னுடைய மன உணர்ச்சியையும் அபிப்பிராயத்தையும் அநுசரித்ததாக இருக்குமேயன்றி, வேறு மாதிரியாக ஒரு நாளும் இராது. ஆகையால், நீ எல்லாப் பொறுப்பையும் உன் தாயார் மேல் போட்டு, உனக்கு அதில் எவ்விதச் சம்பந்தமும் இல்லாதது போலப் பேசுவதை நீ மனப்பூர்வமாகப் பேசுவதாய் நான் எப்படி ஒப்புக்கொள்ளுகிறது?’ என்று கூறினார்.