பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 செளந்தர கோகிலம்

அந்தச் சமயத்தில் அவரது வேலைக்காரி ஒருத்தி வந்து “காசாரி மினியன் பலமாகக் குடித்துவிட்டுப் பிணம்போலத் கிடக்கிறான். அவனை நான் கோலால் தட்டிக்கூடப் பார்த்து விட்டேன். அவன் இப்போது எழுந்திருப்பவனாகத் தோன்ற வில்லை. இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குத்தான் எழுந் திருப்பானென்று மற்றவர்கள் சொல்லுகிறார்கள் என்றாள். அவள் கூறியதைக் கோகிலாம்பாளும் கேட்டுக்கொண்டே இருந்தாள். ஆகையால் சுந்தரமூர்த்தி முதலியார், ‘என்ன கோகிலம்! வேலைக்காரி சொன்னதைக் கேட்டாயா? மினியன் வண்டி ஒட்டி உன்னை உன்னுடைய பங்களாவுக்கு அழைத்துப் போவதாகத் தோன்றவில்லை” என்றார்.

அதைக் கேட்டவுடன் கோகிலாம்பாளின் மனம் தவித்தது. தங்களது வேலைக்காரன் வந்த இடத்தில்கூட அவ்வாறு குடித்து விட்டு வெட்கங்கெட்டுப் படுத்திருக்கிறானேயென்ற எண்ணம் அந்த நற்குணவதியை நிரம்பவும் வதைத்தது. அவன்மீது அவளது மனத்தில் சகிக்கவொண்ணாத ஆத்திரமும் அதிருப்தியும் தோன்றின. அவள் தனது மனவேதனையில் தன்னை மறந்து பேசத் தொடங்கி, “இவன் எங்கே போனாலும் தன்னுடைய பெருமையைக் காட்டாமல் இருக்கிறதில்லை. இவர்களை விட்டாலும், நமக்கும் காரியம் ஆகிறதில்லை. இன்று காலையில் நேர்ந்த அபாயமும் இவனால் நேர்ந்ததென்றே நினைக்கிறேன். காலையிலும் இவன் குடி மயக்கத்தினால் தன்னை மறந்து வண்டியை நேராகப் புரசைப்பாக்கத்திற்கு ஒட்டிக்கொண்டு போவதைவிட்டு கோட்டைக்குத் தெற்கே ஒட்டிக்கொண்டு வந்து என்னை வழியில் வண்டியோடு இருக்கவிட்டு, இறங்கி எங்கேயோ போய்விட்டான். அவன் இந்தத் திக்கில் வந்திரா விட்டால் நம்மெல்லோருக்கும் இத்தனை உபத்திரவங்கள் ஏதுமில்லாமல் போயிருக்கும்’ என்றாள்.

சுந்தரமூர்த்தி முதலியார், ‘ஆம். நீ சொல்வது வாஸ்தவந் தான். எந்த இடத்திலும் காசாரிகள் அநேகமாய் ஒரே மாதிரி யாகத்தான் இருக்கிறார்கள். எனக்கு நான்கு காசாரிகள் இருக்கிறார்கள். மற்றவர்கள் மொந்தைகளைத் தம்முடைய வயிற்றுக்குகள் போகவிட்டால், என் காசாரிகள் தாங்களே