பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 55

எப்போதும் கள்பானைக்குள் முழுகி ஸ்நானம் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால், ஒரு காரியம் - அவர்கள் எவ்வளவுதான் குடித்திருந்தாலும், தங்களுடைய நிதானம் மாத்திரம் தவறவிட மாட்டார்கள், காரியத்திலும் ஏமாற மாட்டார்கள். ஏன் உங்கள் மினியனும் அவ்வளவு கெட்டவனாகத் தோன்றவில்லை. அவன் என்னிடம் வந்து பேசியபோது, தான் புரசைப்பாக்கம் போக எண்ணி வண்டியை மேற்குத் திக்கில் ஒட்ட உத்தேசித்து இடையில் இருந்த இரண்டொரு ரஸ்தாக்கள் பழுது பார்க்கப்படுவதால் அடைபட்டுப் போயிருப்பதைக் கண்டு இன்னம் கொஞ்சதுரம் தெற்காக வந்து அடுத்த ரஸ்தாவின் வழியாய்ப் போக உத்தேசித்து இப்பால் வந்தானாம். வரும் போது திடீரென்று அடி வயிற்றில் ஏதோ சங்கடம் உண்டாயிற்றாம். பிறகு கொஞ்சநேரத்தில் அவனுக்குக் கிறு கிறுப்பும் மயக்கமும் உண்டாகி விட்டனவாம். அதன் பிறகு வண்டி இன்ன இடத்துக்குப் போனதென்பதே தெரியாமல் போய்விட்டதாம். அந்த நிலைமையில், கீழே இறங்கி வெளியில் போய்விட்டு வரவேண்டும்போல இருந்ததாம். வண்டியைப் பாலத்திற்குமேல் நிறுத்திவிட்டுப் போனானாம்; போய் அரை நாழிகை கழித்து வந்து பார்த்தானாம். வண்டி காணப்பட வில்லையாம். அப்போது, அவனுக்கு அறிமுகமான மனிதன் எவனோ வடக்குத் திக்கிலிருந்து வந்தானாம். அந்தத் திக்கில் பெட்டி வண்டி எதுவும் போகவில்லையென்று அவன் சொன்னானாம். அதன்மேல் இவன், உன்னுடைய வண்டி தெற்குத் திக்கில்தான் போயிருக்கவேண்டுமென்று எண்ணி ஒரே ஒட்டமாக ஒடி நல்ல வேளையாக என்னுடைய பங்களாவுக்கு வந்து சேர்ந்து விஷயத்தைச் சொன்னான். நாங்கள் உடனே புறப் பட்டுத் தெற்கே ஓடிவந்தோம். மற்ற விவரமெல்லாம் உனக்கே தெரியும். இன்று காலையில் மினியன் குடித்து மயங்கி இருந்ததாக எண்ண ஏதுவில்லை. அவன் சொல்லும் வரலாறு உண்மையாகவே இருக்கலாம். எல்லாருடையதும் மனித தேகந்தானே. தேக பாதை என்பது எல்லோருக்கும் எந்த நிமிஷத்திலும் நேரக்கூடியதுதானே. ஒரு மனிதன் ஒரு சமயத்தில் ஒரு தவறு செய்கிறானென்பதைக் கொண்டு அவன் எப்போதும் தவறையே செய்கிறவன் என்று நாம் தீர்மானித்துக்கொள்வது