பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 57

நினைத்து, வேறே எதிலேயோ என் கவனத்தைச் செலுத்தியபடி இருந்துவிட்டேன். கடைசியில் வண்டி நின்றது. கதவு திடீரென்று திறக்கப்பட்டது. நாலைந்து முரடர்கள் குபிரென்று பாய்ந்து என்னைத் துக்கிக்கொண்டு கடற்கரைக்குள் ஒடினார்கள். ஒடி என்னைக் கட்டவும் மானபங்கம் படுத்தவும் எத்தனித்தார்கள். நான் அரைநாழிகை நேரம் வரையில் திமிறினேன். அதற்குள் தெய்வம் போலத் தாங்களும் மற்றவர்களும் வந்து என்னை விடுவித்தீர்கள்” என்றாள்.

அந்த வரலாற்றைக் கேட்ட சுந்தரமூர்த்தி முதலியார் மிகுந்த வியப்பும் அநுதாபமும் தோற்றுவித்து, ‘அப்படியா சங்கதி! இதெல்லாம் வேளையின் கூறென்றுதான் சொல்லவேண்டும். இல்லாவிட்டால், மினியனுக்கு உடம்பு சரியில்லாததனால் அவன் வழிதப்பி உங்கள் வண்டியைக் கடற்கரைப் பாலத்தண்டை கொண்டுபோய் நிறுத்திவிட்டு இறங்கிப் போவதும், அதே சமயத்தில் இந்தத் துஷ்ட சிப்பாயிகள் அங்கே வந்து நீ தனியாக வண்டியில் இருந்ததைக் காண்பதும் எப்படி ஒத்துக்கொண்டு இருக்கும். இந்தச் சிப்பாய்கள் பீட்டன் வண்டியில் உட்கார்ந்து கொண்டு எங்கேயோ போவதற்காக அந்த வழியாக வந்திருக் கிறார்கள்; நீ தனியாகப் பெட்டிவண்டியில் இருந்ததைக் கண்டிருக்கிறார்கள். குடிவெறியில், தங்களை மறந்து தங்களுடைய வண்டியை ஒட்டிக்கொண்டு வந்த காசாரியை விட்டு, உன் வண்டியை முன்னால் ஒட்டிக்கொண்டு போகச் செய்து, தாங்கள் பின்னால் பீட்டன் வண்டியில் தொடர்ந்து வந்து மயிலாப்பூருக்கு அப்பால் போனவுடனே, உன்னிடம் பலாத்காரமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். என்னவோ பொல்லாத வேளையின் பலனாக உனக்கு இந்த அபாயம் நேர்ந்தது. ஆனாலும், முடிவில் உன் மானத்துக்கும் தேகத்திற்கும் எவ்விதக் களங்கமும் இல்லாமல் எல்லாம் வல்ல இறைவன் உன்னைக் காப்பாற்றிவிட்டார். இதிலிருந்து தெய்வத்தின் கருணாநோக்கம் உன்மேல் பூர்ணமாக இருக்கிறதென்பது நிச்சயம். ஆனால், தெய்வம் எந்த அற்பக் காரியத்தையும் அநாவசியமாகச் செய்து காட்டுகிறதில்லை. ஒவ்வொரு சம்பவத்தையும் காட்டி அதன்மூலம் எத்தனையோ பெரிய