பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 செளந்தர கோகிலம்

காந்திமதியம்மாளும் அருங்குணப்புதல்வனும் தமது கண்ணில் படுவார்களோ, அல்லது கண்ணில் படாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பார்களோ என்ற சந்தேகமும் கவலையும் தோன்றின. விவரிக்க இயலாத மகா துன்பகரமான அத்தகைய மன நிலைமை யில் திவான் சாமியார் வாய் ஒயாமல் இருமிக்கொண்டு தளர் நடை நடந்து சென்று தமது மாளிகையின் வாசலையடைந்தார். அடையவே, அவ்விடம் அவர் எதிர்பார்க்காத விதமாய்த் தோன்றியது. மாளிகையின் வாசலில் ஒரு பெருத்த கலியாணப் பந்தல் காணப்பட்டது. வாழை மரங்கள், தோரணங்கள், தேர்ச்சீலைகள் முதலிய அலங்காரங்கள் மேற்படி பந்தலில் நிறைந்திருந்தன. பந்தலுக்குள் ஏராளமான ஜனங்களுக்கெதிரில் மேளக் கச்சேரி நிரம்பவும் இன்பகரமாக நடந்துகொண்டிருந்தது. அந்த மாளிகையில் அப்போது கலியாணம் நடக்கிறதென்பது சந்தேகமறத் தெரிந்தது. ஒருக்கால் ராஜாபகதூருக்கு தக்க பிரபு எவரேனும் பெண் கொடுப்பதாக முன் வந்தால், தமது தந்தை அந்தக் கலியாயத்தை நடத்துகிறாரோ என்ற எண்ணம் உண்டானது. ஆனாலும் அவன் பன்னிரண்டு வயதேயடைந்த குழந்தையாதலாலும், அவன் தனது தகப்பனாரைப் பறிகொடுத்து மூன்றே மாதகாலமானதாலும், அவ்வளவு துரிதத்தில் அவர்கள் அந்தக் கலியாணத்தை ஏற்பாடு செய்திருக்கமாட்டார்களென்று திவான் சாமியார் தீர்மானித்துக் கொண்டதன்றி, அந்த மாளிகை நிரம்பவும், வசதியாகவும் விசாலமாகவும் இருப்பதைக் கருதி வேறே எவரேனும் தமது தந்தையிடம் அதை இரவலாகப் பெற்று, அவ்விடத்தில், தமது கலியாணத்தை நடத்தலாம் என்று ஒருவாறு நிச்சயித்துக்கொண்டு அந்த மாளிகைக்கு எதிரிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையையடைந்து உட்கார்ந்து, ‘சங்கரா! சம்போ மகாதேவா” என்று கூறிக்கொண்டு அலுத்துச் சுவரில் சாய்ந்து கொண்டார். அவ்வாறு சாய்ந்தவர் எதிரிலிருந்த மாளிகையைப் பார்த்தபடியே சிறிது நேரம் இருக்க, பந்தலுக்குள் போய் வந்துகொண்டிருந்த மனிதர்களைக் கவனித்து நோக்குவதும் அவ்விடத்தில் நடந்த மேளக் கச்சேரியைக் கேட்பதுமாய் இருந்தார். அங்கு காணப்பட்ட மனிதர்களுள் ஒருவராகிலும் தமக்குத் தெரிந்த மனிதராக இல்லாமல் புது மனிதராக இருந்ததை உணர்ந்ததன்றி, தமது தந்தையாவது,