பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 செளந்தர கோகிலம்

பெரிய காரியங்களைக் கொணர்ந்து பிணைப்பது அவருடைய இயற்கை. அதுபோலவே, ஏதோ பெருத்த உள் கருத்தை வைத்துக்கொண்டே அவர் இந்தப் பயங்கரமான சம்பவத்தைக் காட்டி விலக்கி இருக்கிறார். இந்தச் சம்பவத்தினால் உனக்கு அதிக கெடுதலாவது நீடித்த துன்பமாவது நேர்ந்துவிடவில்லை. இதற்குமுன் ஒருவரோடொருவர் பேசிப் பழகாத நாம் இப்படி நெருங்கிப் பேசவும், ஒருவர் மனசை மற்றவர் நன்றாக அறியவும், இதற்குமுன் என்னைப்பற்றி நினைத்தே இராதவளான நீ என் விஷயத்தில் ஒருவிதமான அன்பும் பட்சமும் கொள்ளவும் இந்தப் பயங்கரமான சம்பவம் செய்ததே பிரத்தியrமான பலன். இதிலிருந்து கடவுளின் கருத்து இன்னதென்பதை நீ உன் பகுத்தறிவினாலும் யூகத்தினாலும் சுலபத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த உலகத்தில் நீ சிநேகிதராகப் பாவித்துப் பட்சமாகவும் பிரியமாகவும் நடத்தக்கூடிய மனிதர் ஒருவர் இருக்கிறார். அவருடைய அருமையையும் நற்குணத்தையும் நீ இதன் மூலமாகத் தெரிந்துகொண்டு அவரிடம் பிரியமாக இரு, தான் கண்ட முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதம் பிடிக்காதே. முதலில் நீ தெரிந்துகொண்ட மனிதர்கள் நிகரற்றவர் என்று எண்ணாதே. அவரைவிடச் சகலமான அம்சங்களிலும் மேலானவர்களும், நீ ஆசை வைக்கக்கூடியவர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுள் உனக்குத் தக்க யோக்கியமான மனிதரை இதோ காட்டுகிறேன் பார் என்று கடவுள் உனக்கு எடுத்துக்காட்டி என் சிநேகத்தை உனக்குச் செய்துவைக்கிறார் என்றே நீ எண்ணிக் கொள்ளவேண்டும். அதுவுமன்றி, கடவுள் தமது பேரருளினால் உனக்குக்காட்டிய பொருளை இவ்வளவோடு அசட்டை செய்து விலக்கிவிடாமல், அதையே உன்னுடைய ஜீவதனமாகக் கொள்ளவேண்டும் என்பதையும் நீ இதிலிருந்து உணர்ந்து கொள்ளவேண்டும். நீ அறியாத முட்டாளல்ல, நல்ல விவேகி. உனக்கு நான் அதிகமாய் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை” என்றார்.

அதைக் கேட்ட கோகிலாம்பாள் அவருக்கு எவ்விதமான

மறுமொழி தருவது என்பதை அறியமால் சிறிதுநேரம் தயங்கிய பின் வேலைக்காரியை நோக்கி, “மினியன் இருக்கும் நிலைமை