பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 59

யில், அவன் இன்று எனக்கு உபயோகப்படுவான் என்று நான் நினைக்கவில்லை. வேறே இவ்விடத்துக் காசாரி எவனையாவது கொஞ்ச நேரம் என்னோடு அனுப்ப முடியுமானால், தயை செய்து அப்படியாவது செய்தால் நலமாயிருக்கும். மினியனுடைய குடிமயக்கம் தெளிகிறவரையில் நான் இங்கேயிருப்பது பல வகையில் எங்களுக்கு அசெளகரியமாக முடியும்’ என்று நயமாகவும் பணிவாகவும் கூறினாள்.

அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி முதலியார் வேலைக்காரியை நோக்கி, “கெங்கம்மா! நீ போய் வண்டியைத் தயார்படுத்தும்படி நம்முடைய காசாரி வீரப்பனிடம் சொல்லிவிட்டுச் சீக்கிரம் வா. அம்மாள் தனியாக இருக்கிறார்கள். இன்னொருத்தி தண்ணிர் குடிக்கப் போனவள் இன்னமும் வரவில்லையே!” என்றுகூற அதைக் கேட்டுக்கொண்டே கெங்கம்மாள் அவ்விடத்தைவிட்டு அப்பால் சென்றாள். சுந்தரமூர்த்தி முதலியார் மறைவிலிருந்தபடி கெங்கம்மாளுக்குச் சைகை காட்டி, கொஞ்சநேரம் பொறுத்துத் திரும்பி வரும்படி ஊமைஜாடையாகத் தெரிவித்தார். அதைத் தெரிந்துகொண்டு அந்த வேலைக்காரி அப்பால் போய் விட்டாள்.

உடனே சுந்தரமூர்த்தி முதலியார் மறுபடி கோகிலாம்பாளு டன் சம்பாஷிக்கத் தொடங்கி, “என்ன கோகிலா! நீ வீட்டுக்குப் போகவேண்டும் என்ற அவசரத்திலேயே இருக்கிறாயேயன்றி, நான் கேட்டதற்கெல்லாம் சரியான உத்தரம் சொல்லமாட்டேன் என்கிறாயே! அந்த மனிதரிடம் எவ்வளவு கெடுதலிருந்தாலும், அவருடைய விஷயத்தில் மாத்திரம் உனக்கு மாறாத பிரியம் ஏற்படவும், என்னிடத்தில் எவ்வளவு மேம்பாடு இருந்தாலும், என் விஷயத்தில் உன் மனம் கொஞ்சமும் பற்று என்பதையே கொள்ளாமலும் எள்ளளவும் ஒட்டாமலும் இருக்கவும், அவர் என்ன புண்ணியந்தான் செய்தாரோ, நான் என்ன பாவம்தான் செய்தேனோ தெரியவில்லை. கோகிலம்! ஏன் நீ இப்படிக் கொஞ்சமும் இரக்கமற்றவளாயும் உண்மையான பிரியம் இல்லலாதவளாகவும் இருக்கிறாய்? உன் மனசைவிட்டு உண்மையைத்தான் சொல்லலாகாதா?’ என்று நிரம்பவும் வருந்தி தாபந்திரியமாய்க் கூறினார்.