பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 செளந்தர கோகிலம்

அவர்களுக்கு நாங்கள் வாக்குக்கொடுத்து விட்டோம். நிச்சய தார்த்தம் வரையில் எல்லா ஏற்பாடுகளும் முடிந்துபோயின. கடைசியில் ஏதோ பொல்லாத வேளையினால் அவர்களுக்கு இப்படிப்பட்ட இடைஞ்சல்கள் நேர்ந்துவிட்டன. அவை எப்படி முடியுமோவென்பதும் நமக்குத் தெரியவில்லை. இந்த நிலைமையில் நாங்கள் திடீரென்று அவர்களை மறந்து, இதுவரையில் செய்த ஏற்பாடுகளையெல்லாம் மாற்றி, உடனே வேறு கலியான ஏற்பாடுகளைச் செய்வதென்றால், அதற்கு எங்கள் மனம் இடங்கொடுக்குமா? தாங்களே யோசித்துப் பார்க்கவேண்டும். அந்த இடந்தான் எனக்குக் கடவுளால் கட்டளையிடப்பட்ட இடம் என்ற நினைவினால், நான் அவர்களோடு பழகிய சொற்ப காலத்திற்குள், அந்த அம்மாளை என் மாமியார் என்றும், அவர்களுடைய குமாரரை என் பர்த்தாவென்றும் நான் என் மனசால் எண்ணி, அவர்கள் அந்த ஸ்தானங்களுக்கு வந்துவிட்டதாகவே எண்ணிக்கொண்டிருந்து விட்டேன். இப்போதும் அந்த எண்ணம் மாறாமலேயே இருக்கிறது. கலியாணச் சடங்கும், திருமாங்கலிய தாரணமும் நடக்கவில்லையே தவிர, என் மனசில் நான் அவர்கள்தான் என் பர்த்தாவென்று எண்ணிவிட்டேன்; இன்னமும் அப்படியே எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஒரு புருஷர் ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டியபின், அவர் ஏற்கனவே திருட்டு, கொலை முதலிய பல குற்றங்களைச் செய்திருந்திருந்து அவைகளுக்காகத் தண்டனை அடையும் பட்சத்தில், அந்தப்பெண் எப்படி வந்த அவமானத்துக்கும் பழிப்புக்கும் இலக்காக வேண்டுமோ, அதே நிலைமையில்தான் நான் இப்போது இருக்கிறேன். அவர்கள் என்னைத் தொட்டுத் தாலி கட்டவில்லை. ஆனாலும், கட்டி விட்டதாகவே நான் என் மனசால் எண்ணிக்கொண்டுவிட்டேன். ஆகையால் இனி அவர்கள் எவ்வித இழுக்குமில்லாமல் வெளிப் பட்டாலும் நான் அவர்களுக்கே பெண்சாதி; அவர்கள் தண்டனையடைந்து ஊரார் பழிக்க இழிவான நிலைமையில் வீட்டுக்கு வந்தாலும் அப்போதும் நான் அவர்களுக்கே பெண்சாதி” என்றாள்.

சுந்தரமூர்த்தி முதலியார் : அவர் உன்னைக் கலியாணம் செய்துகொள்ள இஷ்டப்படாமல் வேறே இன்னும் உயர்வான