பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 65

உறுதியான எண்ணமுடைய பெண். என்னிடம் என்னென்ன விசேஷங்களும் சிறப்புகளும் இருப்பதாகத் தாங்கள் எண்ணு கிறீர்களோ அவைகளெல்லாம் அவளிடத்திலும் பூர்த்தியாக இருக்கின்றன. அவள்ைத் தாங்கள் கட்டிக்கொண்டால், கடவுள் தங்களுக்கு ஒரு குறைவையும் வைக்கமாட்டார். அவள் உலகத்தார் கண்ணுக்கு ராஜாத்திபோலவும் தங்களுக்கு அடிமை போலவும் நடந்துகொள்வாள். ஆகையால் தாங்கள் என்னை விட்டு அவளைக் கட்டிக்கொள்வதில், அற்ப விஷயத்திலும் தங்களுக்கு எவ்வித வித்தியாசமும் உண்டாகாது. என்னிடம் தாங்கள் எதிர்பார்க்கும் சகலமான செல்வ பாக்கியங்களும் சுகமும் கடுகளவும் குறையாமல் அவளாலும் தங்களுக்கு ஏற்படும். தாங்கள் மனசில் எண்ணுவது வெறும் பிரமையே அன்றி, உண்மையில் யாதொரு நஷ்டமாவது சுகக்குறைவாவது சந்தோஷக் குறைவாவது உண்டாகாது. அவள் எனக்குப் பின்னாள் பிறந்தவள். சிலருக்கு வெகுசீக்கிரத்தில் அறிவு முதிர்ச்சி உண்டாகிவிடுகிறது. சிலருக்குச் சொற்ப காலத்திற்குப் பிறகு ஏற்படுகிறது. நான் விளையாட்டு சந்தோஷம் முதலிய வற்றை நாடாமல் காரியத்தையே கவனித்துக்கொண்டிருக் கிறேன். அவள் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறாள். ஏனென்றால் நான் எங்கள் குடும்பப் பொறுப்பு முழுதையும் வகித்துப் பார்த்துக் கொண்டுபோகிறேன். ஆகையால், அவளுக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லை. ஆகவே அவள் எப்போதும் சந்தோஷமும் விளையாட்டுமாக இருக்கிறாள். அவள் தங்களுக்கு வ்ாழ்க்கைப்பட்டுத் தங்களுடைய குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்குத் தகுந்தபடி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி அவசியம் நடந்து கொள்வாள். கேவலம் அசடுகளாய்த் தம் தாய் வீட்டில் இருக்கும் பெண்கள் புருஷர் வீட்டிற்குப் போனவுடன் எப்படியெப்படியோ மகா புத்திசாலிகளாய் மாறிப்போவதை நாம் பார்க்கிறோம். என் தங்கைக்கென்ன கெடுதல்? அவளிடம் விவேகமில்லை என்றாவது, நல்ல குணமில்லையென்றாவது, நல்ல ஒழுக்கமில்லை என்றாவது யாராவது சொல்லமுடியுமா? ஆகையால் தாங்கள் எப்படியாவது எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி இதற்கு முன் தாங்கள் ஒப்புக்கொண்டதுபோல அவளையே கட்டிக்

செ.கோ.Hi-5