பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் * 67

உண்மையானாலும், என் மனசிற்கு இதுவே கடவுளின் உள் கருத்து எனப்படுகிறது. என் விஷயத்தில் தாங்கள் கொண்டுள்ள எண்ணத்தை நானே நேரில் மாற்றித் தாங்கள் என் தங்கையைக் கட்டிக்கொள்ளச்செய்து முகூர்த்தத்தையும் கூடிய சீக்கிரம் வைக்க நிச்சயம் செய்துகொண்டுபோவதற்காகவே கடவுள் இந்த எதிர்பாராத சந்திப்பை உண்டாக்கி இருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். எப்படியாவது தாங்கள் பெரிய மனசுபண்ணி இந்த ஏழைகளின் கோரிக்கையைப் பூர்த்திசெய்துவைக்க ஒப்புக் கொள்ளவேண்டும். இதனால் நான் தங்களுக்கு அநந்தகோடி நமஸ்காரம்செய்து வேண்டிக்கொள்கிறேன்’ என்று நிரம்பவும் உருக்கமாகவும் விநயமாகவும் மரியாதையாகவும் கூறினாள்.

அவ்வாறு கோகிலாம்பாள் கண்ணபிரானை மணந்து கொள்ளும் விஷயத்தில் ஒரே பிடிவாதமான தீர்மானத்தோடு இருப்பாள் என்று சுந்தரமூர்த்தி முதலியார் சிறிதும் எதிர்பார்த்த வரேயன்று. ஆதலால், அவளது முடிவான சொற்கள் அளவற்ற ஏமாற்றத்தையும் விசனத்தையும் பதைபதைப்பையும் உண்டாக்கின. தாம் அவளிடம் சாமதான பேததண்டமென்ற நான்குவித உபாயங்களைப் பிரயோகித்தாலும், அவளது மன உறுதியைச் சிறிதும் அசைக்க இயலாதென்ற நினைவும், தாம் அவளையே மணக்கவேண்டுமென்று கண்டு கொண்டிருந்த கனவெல்லாம் வீண் கனவென்ற நிச்சயமும் தோன்றவே, அவரது உள்ளம் ஏங்கித் தவித்தது. அவரது குது.ாகலமும் சந்தோஷமும் உல்லாசமும் இருந்த இடம் தெரியாதபடி மறைந்துபோயின. அவரது முகம் வாட்டமடைந்து விகாரமாக மாறிப்போயிற்று. அதற்குமேல் அவளுடன் பேசுவதும், அவ்விடத்தில் நிற்பதும் அவருக்கு முற்றிலும் அருவருப்பாகவும் துன்பகரமாகவும் மாறிப் போயின. ஆயினும் தாம் அவ்வளவோடு சம்பாஷணையைத் திடீரென்று நிறுத்திவிட்டு அப்பால் போய்விட்டால், தாம் அவளிடம் கோபமும் பகைமையும் குரோதமும் பாராட்டுவதாக அவள் எண்ணிக் கொள்வாள். ஆதலால் தாம் அவ்வித சம்சயத்திற்கு இடங்கொடுப்பது உசிதமல்லவென்ற எண்ணம் அவரது மனத்தில் தோன்றியது. அதுவுமன்றி, அவள் தனது தங்கையை தமக்கு மணம் புரிந்து வைப்பதாய் உறுதியாக