பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 5

அவரது தவசிப்பிள்ளைகளையாவது, ராஜாபகதூரையாவது காணவில்லை. ஆகவே அவர் தமது சொந்த ஜனங்கள் எவ்வித நிலையிலிருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கும் அந்தக் கலியாணத்தை நடத்துவோருக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் நிச்சயிக்க மாட்டாதவராய் அப்படியே சிறிதுநேரம் சாய்ந்துகொண்டிருக்க, அவரிருந்த வீட்டிற்குள்ளிருந்த ஒரு ஸ்திரீ வெளியில் வந்தாள். வந்தவள் திண்ணையில் உட்கார்ந்திருந்த நமது சாமியாரைக் கண்டாள். கண்டவள் அவரது பெருந் தன்மையான தோற்றத்தைப் பார்த்து அவர் யாரோ மகான் என்றும், வெயிலுக்காக உட்கார்ந்திருக்கிறார் என்றும் நினைத்து அவருடன் பேச்சுக் கொடுக்காமல் மரியாதையாகவும் வணக்கமாகவும் ஒரு பக்கமாய் விலகி தூர இருந்தபடி, எதிர்த்த மாளிகையின் கலியாணப் பந்தலில் தனது பார்வையைச் செலுத்தியவண்ணம் நின்றாள்.

உடனே நமது சாமியார் தமது ஆவலை அடக்க இயலாதவராய் நிரம்பவும் மிருதுவாகவும், வணக்கமாகவும், அன்பாகவும் அந்த ஸ்திரீயை நோக்கி, ‘அம்மா! நீங்கள் இந்த வீட்டில் இருப்பவர்கள் தானே?’ என்றார்.

அதைக் கேட்ட ஸ்திரீ நிரம்பவும் விநயமாகவும் பணிவாகவும் அவரது பக்கம் திரும்பி, “ஆம், சுவாமி! நான் இந்த வீட்டிலிருப்பவள்தான்’ என்றாள்.

உடனே திவான் சாமியார், “ஏனம்மா! எதிர்த்த வீட்டில் என்ன விசேஷம்? பந்தல் போட்டு மேளம் வாசிக்கிறார்களே!” என்றார்.

உடனே அந்த ஸ்திரி, ‘கலியாணம் நடத்துகிறார்கள்’ என்றாள்.

உடனே சாமியார், ‘அந்த வீட்டில் ஒரு பெரியவர் இருந்தாரே, அவருடைய மகனுக்கா கலியாணம்?’ என்று எதையும் அறியாதவர் போலக் கபடமாக வினவினார்.

உடனே அந்த ஸ்திரீயினது முகம் மாறுபட்டுப் போயிற்று, உண்மையான வரலாற்றைச் சொல்வதற்கு வெட்கினவள் போல அவள் நாணிக்கோணித் தயங்கி ஏளனமான புன்னகை செய்து, ‘கிழவருடைய பிள்ளை எங்கே இருக்கிறார். அவர் போன