பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 69

பிரேமையும் மதிப்பும், எந்த முகாந்திரத்தை வைத்துக் கொண்டாவது நான் உன்னோடு கொஞ்சநேரமாவது பேசி அந்த ஆநந்தத்தை அடையவேண்டுமென்று என்னைத் துண்டிக் கொண்டே இருந்தன. நீ தனிமையில் செளகரியமாக இங்கே இருப்பதுபற்றி, இதுதான் அதற்குச் சரியான சந்தர்ப்பமென்று கண்டு, உன்னோடு நான் இதைப்பேற்றி பேசினேனேயன்றி, நான் உண்மையான கருத்தோடு பேசவில்லை. இவ்வளவு உருக்கமாகவும் பரிவாகவும் உன் தங்கையைப்பற்றி நீ பேசியதைக்கேட்க, ‘அக்காள் இருந்தாலும் இப்படியல்லவா இருக்கவேண்டும். ஆகா! தான்விலகிக் கொண்டாவது தங்கையைச் சந்தோஷப்படுத்தவேண்டுமென்று இவ்வளவு தயாள புத்தியோடும் பெருந்தன்மையோடும் வேறே யார் நடந்து கொள்ளப் போகிறார்கள்! இப்பேர்ப்பட்ட குணமுடைய அக்காள் ஒருத்தி எனக்கு இருக்கக்கூடாதா” என்ற ஏக்கம் என் மனசில் பலதடவை தோன்றிவிட்டது. இந்த விஷயத்தில் செளந்தரவல்லியம்மாள் என்னைவிடப் பதினாயிரம் மடங்கு அதிக பாக்கியவதியென்பதே என்னுடைய எண்ணம். அம்மா! கோகிலம் உன்னுடைய பிரியப்படி உன் தங்கையையே நான் கட்டிக்கொள்ளுகிறேன். இது ஒரே உறுதியான வார்த்தை. இந்த உறுதியிலிருந்து நான் பிறழுவேன் என்று இனி நீ நினைக்க வேண்டாம். இந்த விஷயத்தை நீ உன் தாயாரிடத்திலும் சொல்லி, இதையே முடிவான ஏற்பாடாக வைத்துக்கொள்ளச் சொல்லலாம். அதுவுமன்றி, உன் தங்கை ஒருவேளை இது முடியுமோ முடியாதோ என்ற சந்தேகத்தை வைத்துத் தன் மனசை அலட்டிக் கொண்டிருக்கலாம். நீ இப்போது உங்கள் பங்களாவுக்குப் போனவுடன் நேராக அவளிடம் போய் நான் அவளையே கட்டிக்கொள்ள இணங்கிவிட்டேனென்ற செய்தியைச் சொல்லி அவளுடைய விசனத்தை மாற்றி அவள் சந்தோஷம் கொள்ளும்படிச் செய். ஆனால், நான் ஒரே ஒரு விஷயத்தை மாத்திரம் உங்களிடம் கேட்டுக்கொள்ள எண்ணு கிறேன். சமீப காலத்தில் உன்னுடைய நிச்சயதார்த்த கலியாணம் தடைபட்டுப் பார்ப்பவருக்கு விகாரமாக முடிந்தது. அதுவுமன்றி நாமெல்லோரும் உயிருக்குயிராக மதிக்கும்