பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 செளந்தர கோகிலம்

இனி நாம் புரசைப்பாக்கம் பங்களாவில் அன்றையதினம் பகலிலிருந்து நடந்துவந்த இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கூறுவோம். அன்றைய காலையில் கோகிலாம்பாள் பங்களாவை விட்டுப் புறப்பட்டுச் சென்றபொழுது புஷ்பாவதி சுந்தரமூர்த்தி முதலியாருடன் தனிமையில்பேசி அவரை அனுப்ப, அவர் காசாரி மினியனைத் தம்மோடு அழைத்துக்கொண்டு, கோகிலாம்பாளுக்குத் தெரியாதபடி அவளது வண்டியைத் தொடர்ந்து சென்றார் என்று சொன்னோமல்லவா? அவர் சென்றபின்பு, புஷ்பாவதியின் மனதும் அமைதியாக இருக்க வில்லை. அவள் வெளிப்பார்வைக்குக் கபடமேயறியாத பரம ஸ்ாதுவைப்போல நடித்துப் பூஞ்சோலையம்மாளுடன்கூடி இருந்து அந்த அம்மாளின் சொற்களுக்குத் தகுந்தபடி தானும் அநுசரணையாகப் பேசியபடி அவளுக்கு நிரம்பவும் ஹிதமாக நடித்து வந்தாள். ஆயினும், அவளது மனம் கட்டிலடங்காமல் துடிதுடித்து எண்ணிறந்த யூகங்களையும் யோசனைகளையும் செய்து துரிதகதியில் ஒடிக்கொண்டிருந்தது. பூஞ்சோலையம்மா ளின் சொந்தக்காரர்கள், ஏதோ முக்கியமான ஒரு காரியத்தைக் கருதி, யாராகிலும் ஒருவர் வரவேண்டுமென்று தங்களுக்கு எழுதியிருந்ததாக அந்த அம்மாள் கூறியது உண்மையான வரலாறல்லவென்று புஷ்பாவதி நிச்சயித்துக் கொண்டாள். பூஞ்சோலையம்மாளது பங்களாவில் நிச்சயதார்த்த முகூர்த்தம் நடத்தப்பட்ட காலத்தில் மணமகன் கைதியாக்கப்பட்டதும், பிறகு கற்பகவல்லியம்மாள் மானபங்கப்பட்டதும் அவர்களது உறவினர் அனைவருக்கும் பரிஷ்காரமாகத் தெரிந்த விஷயங்கள். ஆதலின், அத்தகைய விபரீத சம்பவங்களினால் சகிக்க வொண்ணாத அவமானமும் துயரமும் வேதனையும் அடைந்திருந்த பூஞ்சோலையம்மாளை எவரும் அவ்வாறு திடீரென்று அழைத்திருக்கமாட்டார்களென்ற எண்ணமே புஷ்பாவதியின் மனத்தில் எழுந்தெழுந்து அவளை ஊக்கிக் கொண்டிருந்தது. அத்தகைய பெருத்த அவமானத்தினாலும், துயரத்தினாலும் பாதிக்கப்படக்கூடியவள் முக்கியமாய் மணப்பெண்ணாகிய கோகிலாம்பாளேயாதலால், அந்த அசந்தர்ப்ப வேளையில் எத்தகைய முக்கிய காரியமானாலும்