பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 செளந்தர கோகிலம்

தாயாருடன் எதைப்பற்றியும் பேசுவார்கள், நானும் என் அக்காளும் துாரவேதான் இருப்போம். எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் என் அக்காள் எவருடைய வீட்டிற்கும் தனியாகப் போகவுமில்லை. அவளை அவ்வளவு பாத்தியதை யோடு அழைக்கக்கூடியவர்களும் இல்லை. இதில் ஏதோ சூது இருக்கிறதென்பது நிச்சயமான சங்கதி. நேற்று இரவில் நான் அந்தக் கற்பகவல்லியம்மாளை வீட்டை விட்டுத் துரத்தியதோடு இவர்களுடைய எண்ணம் மாறிவிடுமென்றல்லவா. நான் நினைத்தேன். இன்னமும் இவர்கள் அந்தக் கண்ணபிரானுடைய டைத்தியம் பிடித்து அலைகிறார்கள் போலிருக்கிறதே. அந்தக் கண்ணபிரானைத் தப்ப வைக்க வேண்டுமென்ற நினைவோடு இவர்கள் ஏதோ முயற்சிசெய்வதாகத் தோன்றுகிறது. அதற்காகக் கோகிலாம்பாள் யாருடைய சிபார்சைக் கோரியாகிலும் போயிருக்கிறாளோ அல்லது அவருக்காக எவரையாவது வக்கீல் அமர்த்தப் போயிருக்கிறாளோ என்பது தெரியவில்லை. இருந்தாலும் கோகிலாம்பாள் அசாத்தியமான துணிச்சல்காரியாய் விட்டாள். கண்ணபிரானுடைய மோகத்தில் இவள் தன்னுடைய கெளரவத்தையும் நாணத்தையும் அடியோடு துறந்து இப்படி நடந்துகொள்வாள் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. அம்மாளுக்கும் வர வர்ப் புத்தி கெட்டுப்போய்விட்டது. அக்காள் எதைச் சொன்னாலும் அதன்படியே அம்மாள் ஆடுகிறாள். இருக்கட்டும். கோகிலாம்பாள் திரும்பி வரட்டும். அவளுக்குச் சரியான மண்டகப்படி நடத்தி வைக்கிறேன். நேற்று இரவு நான் பேசிய பேச்சில் கற்பகவல்லி இடந்தெரியாதபடி உடனே பறந்து போய்விட்டாள். இந்நேரம் அவள் சமுத்திரத்தில் விழுந்து மாண்டுபோய் இருப்பாள். கோகிலாம்பாளுடைய கதியும் அதேமாதிரிதான் முடியப்போகிறது. நான் கேட்கப்போகும் கேள்விக்கு உத்தரம் சொல்லமாட்டாமல் இவள் உடனே நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகப்போகிறாள் பார் என்றாள்.

அதைக்கேட்ட புஷ்பாவதி நிரம்பவும் விநயமாகவும் ஹிதமாகவும் பேசத்தொடங்கி, “செளந்தரா! நான் இங்கே இருக்கிறவரையில் நீ ஆத்திரப்பட்டு எதையும் செய்துவிடாதே. பிற்பாடு நாங்கள்தான் உன்னைத் தூண்டிவிட்டோம் என்ற