பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 செளந்தர கோகிலம்

இடத்தில் புல் முளைத்துப் போய்விட்டது. கிழவர்தான் இப்போது குமரராயிருக்கிறார்’ என்று தணிவான குரலில் புரளியாகக் கூறினாள்.

அதைக் கேட்ட சாமியார் வியப்படைந்தவராய் மிகவும் நயமாகவும் மரியாதையாகவும் அந்த அம்மாளை நோக்கி, “என்ன தாயே! ஒரு மாதிரியாகச் சொல்லுகிறீர்களே? நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே! கிழவர் குமரராகி இருக்கிறாரென்று எதனால் சொல்லுகிறீர்கள்?” என்றார்.

அவரது விநயமான சொற்களால் வசீகரிக்கப்பட்டவளாய் அந்த ஸ்திரீ அவரிடம் ஒருவித அபிமானமும் பணிவும் தோற்றுவித்து, “நான் பொய் சொல்லவில்லை; நிஜத்தையே சொல்லுகிறேன். கிழவருடைய குடும்ப சங்கதி இந்த ஜில்லா முழுதும் பரவி இருக்கிறதே; அது உங்கள் வரையில் எட்ட வில்லையா?” என்றாள்.

உடனே திவான் மிகுந்த கலக்கமும் கவலையும் கொண்டு, ‘அம்மணி நான் ஊரூராய் அலையும் பரதேசி. நான் சுமார் ஒருவருஷ காலத்துக்கு முன்பு இந்த ஊருக்கு வந்து எதிர்த்த வீட்டுத் திண்ணையில் தங்கி இருந்தேன். அந்த வீட்டின் சொந்தக்காரரான பெரியவர் என்னிடம் அன்பாகப் பேசி அன்னமளித்து என்னை அனுப்பி வைத்தார். அவர் மாத்திரம் இந்த ஊரில் தனிமையில் இருப்பதாகவும், அவருடைய பிள்ளை வேறே எந்த ஊரிலோ பெரிய உத்தியோகத்தில் இருப்பதாகவும் நான் கேள்வியுற்றேன். இப்போது கலியானப் பந்தலைப் பார்த்தவுடன், ஒருவேளை அவருடைய பிள்ளைக்குத்தான் கலியாணமோவென்று நினைத்துக் கேட்டேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இடையில் ஏதேதோ மாறுதல்கள் நேர்ந்திருப்பதாக எண்ணவேண்டியிருக்கிறது. பெரியவரும் அவருடைய பிள்ளை முதலியாரும் rேமமாய் இருக்கிறார்கள் அல்லவா?’ என்றார்.

அதைக் கேட்ட அந்த ஸ்திரீ, ‘சுவாமியார் ஐயா! இந்தக் குடும்பத்தின் சீர்குலைவை நான் என்ன வென்று சொல்லப் போகிறேன்! பெரியவர் இதுவரையில் இந்த ஊரில் தனியாகத் தான் இருந்தார். இவருடைய குமாரர் திருவனந்தபுரத்தில் மாசம்