பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 79

நிரம்பவும் இளக்கமாகவும் மனநைவோடும் பேசத்தொடங்கி, “என்ன புஷ்பாவதி நான் படும் கஷ்டம் உன் மனசில் உறைக்க வில்லையா? உங்கள் இருவர் விஷயத்திலும் நான் ஏதாவது தவறான காரியம் செய்திருந்தால், நீங்கள் என்னை அசட்டை செய்வது நியாயமே. என் அக்காளும் அம்மாளும் துர்ப்புத்தி பிடித்து அலைந்தால் அதற்காக என்னிடம் நீங்கள் கடுமை காட்டலாமா? அநேகமாய் அந்தக் கடிதம் அந்தத் துருக்கச்சி கற்பகவல்லியிடத்திலிருந்தே வந்திருக்கவேண்டும். நேற்றிரவில் இங்கே புறப்பட்டு ஒடின சிறுக்கி எங்கேயோ போய் இருந்து கொண்டு, இவர்களுக்குக் கடிதம் எழுதியனுப்பி இருக்கிறாள் போலிருக்கிறது. அவளை மறுபடி அழைத்துவருவதற்காக இவள் ஒடி இருக்கிறாள் போலிருக்கிறது. இருந்தாலும் என்ன? நான் இவர்கள் மூவருக்குமே சரியான மரியாதை நடத்துகிறேன். அதைப்பற்றி நீ கவலைப்படாதே. அந்தக் கடிதம் யாரிடத்திலிருந்து வந்திருக்கிறதென்பதை நான் இதோ ஒரு நொடியில் கண்டு பிடித்துவிடுகிறேன். அந்தக் கடிதம் அம்மாளுடைய பெட்டியில் தான் இருக்கும். நான் மெதுவாகப்போய் அம்மாளுக்குத் தெரியாமல் அதை எடுத்துக்கொண்டு வந்து பார்த்து இவர்களு டைய மர்மத்தைத் தெரிந்துகொண்டு அதை வைத்துக்கொண்டே இவர்களுடைய மானத்தை வாங்கிவிடுகிறேன். இதைக் குறித்து இவர்கள் உன்மேல் ஏதாவது சந்தேகம் கொள்வார்கள் என்று நீ அஞ்ச வேண்டியதில்லை” என்றாள்.

அதைக் கேட்ட புஷ்பாவதி, ‘இருக்கட்டும். பார்க்கலாம். இன்று மாலைக்குள் என் தமயனார் அநேகமாய் மறுபடியும் இங்கே வருவார்; அல்லது ஏதேனும் செய்தி சொல்லி அனுப்புவார். நான் திரும்பவும் அவருடன் பேசி, அவரைச் சரிப்படுத்துகிறேன். எல்லாவற்றிற்கும் நீ இந்தக் கடிதத்தை எடுத்து அதன் விஷயத்தைத் தெரிந்துகொள்’ என்று கூறியபின் பூஞ்சோலையம்மாளிருந்த இடத்திற்குப் போய்ச்சேர்ந்து விட்டாள்.

உடனே செளந்தரவல்லியம்மாள் நேராக சமையலறைக்குச் சென்று தனது போஜனத்தை முடித்துக்கொண்டதாகக் காட்டிய பின் நேராகத் தனது சயன அறைக்குச்சென்று படுத்துக்கொண்டு,