பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் - 81

இல்லை. இவன் கோகிலாம்பாளைச் சிறைச்சாலைக்கு அழைக்கிறதாவது? அவளென்ன வயசான கிழவியா, அல்லது சிறு குழந்தையா?. சரியான பக்குவகாலமடைந்த குமரி அவளைப் பார்த்துத் தான் அடைபட்டிருக்கும் இழிவான சிறைச் சாலைக்கு வரும்படி அந்த நாய் அழைக்கிறது! அதை சிரமேல் ஏற்று, இந்த எல்லாம் கற்ற முட்டாள் உடனே புறப்பட்டு ஒடுகிறது? வீட்டிற்குப் பெரியவளான தாய்க் குட்டிச்சுவர் அம்மாதிரியே போகும்படி பெண்ணைக் கூட்டியனுப்பிவிட்டு, சொந்தக்காரர் வீட்டுக்கு அவசர காரியத்தின் நிமித்தம் போனதாய்ச் சாக்கு சொல்லி அதை மெழுகுவது! என்ன ஆச்சரியம் இது! உலகத்தில் இப்படிப்பட்ட விநோதமும் நடக்குமா? இவர்கள் பூஞ்சோலையில் சந்தித்து ஆநந்தமாக இருக்க முயற்சித்தபோது ஏதோ பெரிய இடையூறு நேர்ந்து விட்டதாக எழுதியிருப்பது, நான் திடீரென்றுபோய் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப் பின்னிக் கொண்டு கிடந்ததைக்கண்டு அதைப்பற்றி இவர்களைக் கண்டித்ததையே குறிக்கிறது. அப்படியானால் இவர்கள் பூஞ்சோலையில் செய்த காரியம் ஒழுங்கானது! நான் அதைப்பற்றி இவர்களைக் கண்டித்தது அக்கிரமச் செய்கை: இவர்கள் குதூகலமாய் ஒருவர் மடியின்மேல் மற்றொருவர் படுத்து ஆநந்தமாகப் பேசிக்கொஞ்சி குலாவி மெய்ம்மறந்து போயிருந்தது இவர்களுடைய் அபிப்பிராயத்தில் ஆநந்தமல்லவென்றால், இவர்கள் அப்போது அதற்குமேலும் என்னென்ன செய்த ஆநந்தமடைய உத்தேசித் தார்களோ, அதற்கு இடையூறாக நான் போனேனோ தெரிய வில்லை. இதிலிருந்து இவர்கள் அவ்விடத்தில் என்ன எண்ணத் தோடு சந்தித்தார்களென்பது எளிதில் விளங்குகிறது. இவர்கள் அங்கே சந்திந்து சகலமான விஷயங்களையும் ஆசைதீரச் செய்து பார்த்துவிட எண்ணினார்கள் என்பதை ருஜூதப்படுத்த இதை விட வேறே அத்தாr தேவையே இல்லை. கோகிலாம்பாளை மானபங்கப்படுத்த இந்த ஒரு கடிதமே போதுமானது. இன்னம் நிச்சயதார்த்தம்கூட சரியாக முடியவில்லை. இதற்குள் இவர்கள் ரகஸியத்தில் வெகுதூரம் முன்னால்சென்று சாந்தி கலியாணம் வரையில் நடத்திக்கொண்டார்களே! அதுவும் போதாதென்று Q&.(335m.Hi-6 \