பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 செளந்தர கோகிலம்

அவன் அடைபட்டிருக்கும் சிறைச்சாலைக்குக்கூட இவள்போய் கொஞ்சமும் வெட்கம், சிக்கு, சூடு, சொரணை முதலியது எதுவுமில்லாமல் மூக்கறுந்தவளாய் போலீஸ் ஜெவான்களுக்கு எதிரில் அவனுடன் பேசுகிறதாம்! துர மானங்கெட்ட நாய்கள்! இப்படியும் மனித சுபாவம் கெட்டுப் போகுமா! சிறைச் சாலையில் அடைபட்டிருக்கும் மனிதன் யாரையாவது ஒத்தாசைக்கு அழைக்கவேண்டுமானால், அதற்கு என் தாயார் இல்லையா, அல்லது அவனுடைய தாயார்தான் இல்லையா, அல்லது இன்னும் வேலைக்காரர்கள் இல்லையா? அவர்களுள் யாரையாவது வருவித்துத் தனக்கு ஆகவேண்டியதைச் செய்து கொள்ளலாகாதா? இதற்குப் பதினாறு வயசுக்குமரி ஒருத்தி தேவையா? இதைப்பற்றி நினைக்க நினைக்க, இதில் ஏதோ சூதிருக்க வேண்டுமென்றே எண்ணவேண்டியிருக்கிறது. அழகான யெளவனக் குமரியைச் சிறைச்சாலைக்குள் வரவழைத்து அவளோடு தான் பேசினால், அங்குள்ள போலீஸ் அதிகாரிகளும் ஜெவான்களும் அவளுடைய அழகைக் கண்டு மோகித்து இரங்கி அவனை விட்டுவிடுவார்கள் என்று எண்ணி அவன் இவளை அழைத்திருக்க வேண்டும். அல்லது இவளை யாராவது பெரிய அதிகாரியிடம் துதாய் அனுப்பி, தன் விஷயத்தில், அநுகூலம் செய்யும்படி கேட்டுக்கொள்ளச் செய்தால் இவள் அவரை எப்படியாவது சரிப்படுத்தட்டும் என்று எண்ணி இவளை வரவழைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், மற்ற பெரியவர்களை விட்டு, குறிப்பாக இவளை அழைத்ததற்கு யாதொரு முகாந்திரமும் இல்லை. இவள் காலை எட்டுமணி சுமாருக்குப் போனாள். இப்போது நடுப்பகல் வேளை. இதுவரையில் இவள் சிறைச்சாலையில் என்ன செய்கிறது? சாதாரணமான கருத்தோடு இவளை அவன் அழைத்திருந்தால், இவர்கள் அரை நாழிகை பேசப்போகிறார்கள் அல்லது ஒரு நாழிகை பேசிக்கொண்டிருக்கப் போகிறார்கள். சரியாக அரைநாள் ஆய்விட்டதே! அவன் இவளை யாரிடத்திற்கோ அனுப்பி இருக்க வேண்டுமென்பதே நிச்சயமான விஷயம். ஆகா! கோகிலாம்பாள் இருந்த இருப்பென்ன! அவள் பேசும் வேதாந்தமென்ன! மற்றவருக்குப் போதிக்கும் நீதிகளென்ன! அப்படிப்பட்ட புனிதவதி இப்போது தேவடியாள் தனத்தில்