பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 செளந்தர கோகிலம்

அவருடன் பேசி அந்த ஆநந்தம் எப்படி இருக்கிறதென்பதைப் பார்த்தே தீரவேண்டும். அக்காள் வரட்டும். அவளுக்கு நான் வழி சொல்லுகிறேன். இவர்களுடைய துர்க்குணங்களும், துர்நடத்தை யும் என் மனசுக்குப் பிடிக்கவில்லை யென்றும், நான் கத்தமான மனுஷி என்றும், நான் புஷ்பாவதிக்கும், அவளுடைய தமயனாருக்கும் இன்று எப்படியாவது மெய்ப்பித்துக் காட்டி விடுகிறேன்’ என்று செளந்தரவல்லியம்மாள் தனக்குள்ளாகவே பலவாறு எண்ணமிட்டு, ஒருவிதமாக முடிவு செய்துகொண்டு கண்ணபிரானது கடிதத்தைச் சிறிதாக மடித்து, அதைத் தனது இரவிக்கைக்குள் சொருகி பத்திரப்படுத்திக்கொண்டு போஜனம் செய்து அலுத்து உறங்குகிறவள் போலத் தனது மஞ்சத்தில் வெகுநேரம் வரையில் படுத்திருந்தாள். .

புஷ்பாவதியம்மாளும் பூஞ்சோலையம்மாளும் தங்களது போஜனத்தை முடித்துக்கொண்டதும், பிற்பகலில் சுமார் நான்கு மணிவரையில் உட்கார்ந்து சம்பாவித்திருந்ததும், காலையில் வண்டிக்கார முருகேசன் வந்து பூஞ்சோலையம்மாளிடம் தனிமையில் பேசியதும், புஷ்பாவதியம்மாள் பிற்பகலில் நித்திரையில் ஆழ்ந்து போனதும், அந்தச் சமயத்தில் பூஞ்சோலையம்மாள் கோகிலாம்பாளைத் தேடும்பொருட்டுப் புறப்பட்டுப்போனதும் முன்னரே விரிவாய்க் கூறப்பட்டிருக் கின்றன. ஆகவே, நாம் அவைகளைவிட்டு, மேலே நிகழ்ந்த வரலாற்றைக் கூறுவோம்.

பூஞ்சோலையம்மாள் தனது பங்களாவை விட்டுப் புறப் பட்டுப்போன பிறகு சிறிது நேரத்திற்கெல்லாம், அவர்களது பங்களாவிலிருந்த டெலிபோன் யந்திரத்தில் மணி கணகண வென்று அடித்துக் கொண்டது. அந்த டெலிபோன் யந்திரம் ஸ்திரீகளின் மகாலில் ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது என்பதை இவ்விடத்தில் நாம் குறிப்பிடுவது அவசியம். அந்த மகாலின் மூன்று பக்கங்களில் முறையே பூஞ்சோலையம்மாள், செளந்தரவல்லியம்மாள், கோகிலாம்பாள் ஆகிய மூவரது படுக்கையறைகளும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. இந்த மகாலில் டெலிபோனின் மணி ஒலித்தால் அது பக்கத்திலிருந்து மூன்று சயன அறைகளிலும் உடனே கேட்கும். ஆகவே, மேலே