பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 7

ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் திவான் வேலையாக இருந்தார். அவருக்குக் கலியாணம் ஆகி அநேக வருஷகாலம் ஆகிறது. அவருக்கு 10, 12-வயசில் ஒர் ஆண் குழந்தைகூட இருந்தது” என்றாள்.

உடனே திவான் மிகுந்த கலக்கமும் அடைந்து, ‘குழந்தைகூட இருந்தான் என்கிறீர்களே! அந்தக் குழந்தை இப்போது இல்லையா?” என்றார்.

அந்த அம்மாள். ‘அந்தக் குழந்தை உயிரோடுதான் இருக்கிறான்; ஆனாலும், அவன் இப்போது இன்ன இடத்தில் இருக்கிறான் என்பது மாத்திரம் தெரியவில்லை” என்றாள்.

சாமியார், “அந்தப் பையனுடைய தகப்பனார் திருவனந்த புரத்தில் திவான் வேலையில் இருப்பதாகச் சொன்னீர்களே! அவருடைய பையன் அங்கே இருந்து எங்கேயாவது போய் விட்டானா? அவர்களுடைய வரலாற்றை நன்றாகச் சொல்லுங்கள் என்றார்.

அந்த ஸ்திரீ “சுமார் மூன்று மாச காலத்துக்குமுன் இந்த ஊர்க் கோவிலில் திருவிழா நடந்தது. அதற்காக வந்து விட்டுப் போகும்படி பெரியவர் தம்முடைய பிள்ளைக்குக் கடிதம் எழுதி, தவசிப்பிள்ளையையும் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினாராம். அவருடைய பிள்ளை வேலையைவிட்டு வரமுடியவில்லையாம். அவர் தம்முடைய சம்சாரத்தையும், பிள்ளையையும் வேலைக் காரர்களோடு முன்னால் அனுப்பிவிட்டு, தாம் பின்னால் தேரன்றைக்கு முதல்நாள் இங்கே வருவதாகச் சொல்லி அனுப்பினாராம். வேலைக்காரர்களோடு திவானுடைய பெண்ஜாதியும் பிள்ளையும் இங்கே வந்து சேர்ந்தார்கள்; அவர்கள் காலையில் வந்தார்கள். அன்று பகல் முழுவதும் பெரியவரோடு இருந்தார்கள். இரவில் எல்லோரும் சாப்பிட்டு விட்டுப் படுத்துக்கொண்டு துரங்கினார்கள். மறுநாள் பொழுது விடிந்தவுடன் கிழவர் பார்க்கிறார். மருமகள், பேரன் ஆகிய இருவரும் போன இடம் தெரியவில்லை; இருவரும் மாயமாய் மறைந்து போய்விட்டார்கள். கிழவர் நிரம்பவும் பயந்து திகிலடைந்து ஊர் முழுவதும் தேடிப் பார்த்தார்; ஆள்களை விட்டு கிணறு குளம் முதலிய சகலமான இடங்களையும்