பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 செளந்தர கோகிலம்

வைத்துவிட்டு உல்லாஸமாக நடந்து செளந்தரவல்லியம்மாளின் சயன அறையை அடைந்து, “என்ன செளந்தரா தூக்கமா?. என்று வாஞ்சையாகவும் நயமாகவும் வினவினாள்.

அதைக் கேட்ட செளந்தரவல்லியம்மாள் மிகுந்த களிப்பும் குதுாகலம் அடைந்தவளாய் முகமலர்ச்சியுடன் சரேலென்று எழுந்து உட்கார்ந்துகொண்டு, “வா, புஷ்பாவதி நான் தூங்க வில்லை; விழித்துக்கொண்டுதான் இருக்கிறேன். வா. வந்து இப்படி என் பக்கத்தில் உட்கார்ந்துகொள்’ என்று வாஞ்சை யோடும் உருக்கமாகவும் கூறி உபசரித்துப் புஷ்பாவதியைக் கட்டிப்பிடித்து ஆசையோடு இழுத்துக் கட்டிலின்மீது தனக்குப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டாள்.

புஷ்பாவதியம்மாள் மிகுந்த மகிழ்ச்சியும் உல்லாஸமும் தோற்றுவித்து, “ஏன் செளந்தரா காலையில் பெண்ணை அனுப்பிவிட்டு, இப்போது அம்மாளும் போய்விட்டார்கள் போலிருக்கிறதே! தமக்கு இங்கே அவசர காரியமிருப்பதனால், தாம் ஒரு நிமிஷங்கூட இவ்விடத்தைவிட்டு அசைய முடியவில்லையென்றும், அதனால் கோகிலாம்பாளைத் தனிமையில் அனுப்புவதாகவும் அம்மாள் சொன்னார்களே! இப்போது அவர்களே போய்விட்டார்களே? இரண்டு பேர்களும் ஒரே காரியத்தை உத்தேசித்துப் போயிருப்பார்களா அல்லது அம்மாள் வேறே இன்னும் ஏதாவது காரியத்தை உத்தேசித்துப் போயிருப்பார்களா? இவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்பது தெரியவில்லையே! என்று தமயனார் இப்போது டெலிபோன் மூலமாய் என்னோடு பேசி, நான் எப்போது அங்கே வருவேனென்றும், எனக்காக வண்டி அனுப்பலாமா என்றும் கேட்டார். நான் அதற்குச் சரியான உத்தரம் சொல்ல முடியவில்லை. காலையில் கோகிலாம்பாள் பங்களாவைவிட்டு எங்கேயோ போயிருக்கிறாளென்ற விஷயம் அவருக்குத் தெரியும். அதுவே அவருடைய மனசுக்குச் சுத்தமாய்ப் பிடிக்க வில்லை. இப்போது அம்மாளும் அவளைத் தேடிக்கொண்டு போயிருக்கிறார்களென்றால், இன்னும் அவர் பலவகையில் சந்தேகம் கொள்வார். அதுவுமன்றி முக்கியஸ்தர்களான இருவரும் இல்லாதபோது எனக்கு இங்கே எவ்வித