பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 89

அலுவலுமில்லை. ஆகையால் என்னை அழைத்துக்கொண்டு போக அவர் வண்டியை அனுப்பிவிடுவார். நான் ஒரு மாதிரியாய்ச் சொல்லி அவரை அனுப்பிவிட்டேன். நான் இன்று காலை முதல் இங்கே இருந்து என்ன சாதிக்கிறேனென்பது எனக்கே தெரியவில்லை. லக்ஷணமாய் சாப்பிடுவதையும், சுகமாய்த் தூங்குவதையும் தவிர, நான் இங்கே வேறே எந்த விதத்திலும் உபயோகப்படுவதாகத் தோன்றவில்லை. இவர்கள் இருவரும் ஏதோ முக்கியமான காரியத்தைக்கருதி எங்கெங்கோ போய் அலைந்துகொண்டிருக்கிறார்கள். நான் சும்மா இருப்பது என் மனசுக்கு ஒருவிதத்தில் வேதனையாக இருந்தாலும், உன்னை விட்டுப்பிரிந்து போக என் மனம் இடந்தரவில்லை. அதை எண்ணியே நான் என் தமயனாரைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டேன்’ என்று நிரம்பவும் உருக்கமாகவும் வாஞ்சையோடும் மொழிந்தாள்.

அவளது சொற்களை உண்மையாகவே மதித்த செளந்தர வல்லியம்மாளினது மனமும் கண்களும் கலங்கி இளகின. கண்ணிரும் துளித்தது. அவள் மிகுந்த வாத்ஸல்யமும் நன்றி விசுவாசமும் பொங்கிய மனத்தினளாய், “புஷ்பாவதி! நான் உன்னிடத்திலும் உன் தமயனாரிடத்திலும் வைத்துள்ள பிரேமையும் வாஞ்சையும் இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது. அதுபோலவே நீங்களும் என்மேல் உண்மையான மதிப்பும் பாசமும் வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய நல்ல மனசைக்கெடுப்பதற்கு, தாயும் மகளும் சேர்ந்து என்னென்னவோ தகாத காரியங்களையெல்லாம் செய்து என் அங்கமெல்லாம் குன்றிப்போகும்படியும், என் மனம் புண்பட்டுப் பதறும்படியும் நடந்துகொள்ளுகிறார்கள். நீங்கள் என் மேல் மனப்பூர்வமான பிரியம் வைத்திருப்பது உண்மையானால் அவர்கள் செய்வதைக் கருதி நீங்கள் என்னைத் தண்டிக்கக் கூடாது. அம்மாளும், அக்காளும் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, நீ இன்று முழுதும் இங்கே இருந்துதான் போகவேண்டும். என் மனம் படும்பாட்டிற்கு, நீ இந்தச் சமயம் இங்கே இருப்பது தேவாமிருதம் சாப்பிடுவதுபோல அவ்வளவு அதிக இன்பகர மாகத் தோன்றுகிறது. இந்தச் சமயத்தில் நீ என்னைவிட்டுப்