பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SC) செளந்தர கோகிலம்

போகவே கூடாது. அதுவுமன்றி எனக்குச் செய்த வாக்குறுதியை எப்படியும் இன்றிரவு நீ நிறைவேற்றியே தீரவேண்டும். நீ இப்போது அவர்களுடன் டெலிபோன் வழியாக அரைநாழிகை வரையில் பேசினாயே, இவ்வளவுதானா பேசினர்கள்? வேறு எதைப்பற்றியும் நீங்கள் பேசவில்லையா?அவர்கள் இன்றிரவு இங்கே வருவதைப்பற்றி நீயாவது அவராவது எவ்வித பிரஸ்தாபமும் செய்யவில்லையா? அவர் என்னைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையா?” என்று மிகுந்த ஆவலும் உருக்கமும் தோன்றக் கூறினாள்.

புஷ்பாவதி சந்தோஷமாகப் புன்னகை செய்து நயமாகப் பேசத்தொடங்கி, “என்ன செளந்தரா நான் உன்னைப்பற்றிப் பேசாமல் விட்டிருப்பேன் என்றா நினைக்கிறாய்? நானும் அவரும் பேசும்போது உன்னைப்பற்றிய பேச்சைத்தவிர வேறு முக்கியமான பேச்சே கிடையாது. நான் இங்கே இருப்பதும், அவர் அடிக்கடி இங்கே வருவதும் யாரைப்பற்றி என்று நினைக்கிறாய்? என் தமயனாரும் நானும் உன்னிடம் வைத்துள்ள ஆசை இவ்வளவுதான் என்று நான் எப்படி உனக்கு எடுத்துக்காட்டப் போகிறேன். அவர் எப்போதும் உன் டைத்தியமே பைத்தியமாகப் பிடித்து அலைகிறார். அவர் பத்து வார்த்தைகள் சொன்னால் ஒன்பது வார்த்தைகள் உன்னைப் பற்றியதாகவே இருக்கின்றன. அவர் எப்போது என்னோடு பேசினாலும் அவர் என்ன கேள்வி கேட்கிறார் தெரியுமா? செளந்தராவுக்கு என்னைக் கட்டிக்கொள்ள உண்மையில் ஆசைதானா? நான் அவள் இருக்கும் இடத்துக்குத் தனியாக வந்தால், அவள் கூச்சமில்லாமல் என் இஷ்டப்படி நடந்து கொள்வாளா, அல்லது பிணங்கிக்கொண்டு தூரப்போய் மறைந்து நிற்பாளா, அவள் அடிக்கடி என்னைப்பற்றியே பேசுகிறாளா என்று அவர் இந்த மாதிரி உன்னைப்பற்றிய கேள்விகளையே கேட்கிறாரேயன்றி, வேறு எதையும் கேட்கிறதில்லை” என்றாள்.

செளந்தரவல்லி அளவற்ற ஆநந்தமும் குதூகலமும் அடைந்து பூரித்துப்போய் முகமலர்ச்சியடைந்து பரவசமுற்று, ‘ஆ அப்படியா ஐயோ! நீ சொல்வதைக் கேட்க சந்தோஷம்