பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 91

என்னை அப்படியே ஆகாசத்தில் தூக்கிக்கொண்டு போகிறது. புஷ்பாவதி, ஐயோ! இந்தப் பாழும் பொழுது தொலையமாட்டேன் என்கிறதே! எப்பொழுது இரவு வருமோ தெரியவில்லையே! எப்பொழுது நான் என் மனமார, என் ஆசைதிர, என் உள்ளங்குளிர அந்த துரையைக்கண்டு அவருடன் ஒரு வார்த்தையாவது பேசுவேனோ! ஆகா! நீ இப்போது டெலி போனில் அவர்களுடன் பேசியபோது, அவர்கள் என்ன பேசுகிறார்களென்று அறிய வேண்டுமென்று என் மனம் எவ்வளவு அதிகமாய்த் துடித்துப் பதறியது தெரியுமா? அவர்களுடன் நானும் தாராளமாய் டெலிபோனில் பேசும் படியான காலம் எப்போது வரப்போகிறது. புஷ்பாவதி ஐயோ! நான் என்ன செய்வேன்! என் தேகம் கட்டில் அடங்காமல் தவித்துப் பறக்கிறது! இந்த என் வேதனை எப்போது தீருமோ தெரியவில்லையே!” என்று முற்றிலும் உருக்கமாகக் கூறினாள்.

அப்போது புஷ் பாவதி நயமாகப் புன்னகை செய்து, ‘செளந்தரா கவலைப்படாதே! நீயும் அவரும் கலந்து பேசி ஆநந்தமாக இருக்கும் காலம் சமீபத்தில் நெருங்கிவிட்டது. பொறுத்தது பொறுத்தாய்; இன்று இரவு பத்துமணி வரையில் பொறுத்துக்கொள். நான் எப்படியாவது பிரயத்தனப்பட்டு அவரை வரவழைக்கிறேன். அதுவரையில் உனக்குப் பொறுக்காது போலிருந்தால் நீ இன்னொரு காரியம் செய்கிறாயா? மறுபடி என் தமயனார் என்னை டெலிபோனில் கூப்பிட்டு என்னுடன் பேசுவதாய்ச் சொல்லி இருக்கிறார். எனக்குப் பதில் நீ டெலிபோனிலிருந்து அவருடன் பேசுகிறாயா? “யார் பேசுகிறது” என்று அவர் கேட்டால், “புஷ்பாவதி” என்று நீ சொல்லிவிட்டு அவருடன் பேச்சுக்கொடு. அவர் உன்னைப்பற்றியும் உன் அக்காள் முதலியோரைப்பற்றியும் என்ன சொல்லுகிறார் என்பதை நீயே நேரில் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம். அதன் பிறகாவது உன் மனம் கொஞ்சம் சமாதானப்படும்” என்றாள்.

அந்த யுக்தின் யக் கேட்ட செளந்தரவல்லியம்மாள் கட்டிலடங்காப் பெருமகிழ்ச்சியும் குதுரகலமும் அடைந்தவளாய், “ஆம், புஷ்பாவதி. நல்ல யோசனை சொன்னாய்! அப்படியே பேசுகிறேன். ஆனால், அவர்கள் மறுபடி இன்று டெலிபோன்