பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. செளந்தர கோகிலம்

வதைத்தது. தான் அவருடன் சுவாரஸ்யமாக சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், தனது தாயார், அல்லது அக்காள் ஆகிய எவரேனும் வந்துவிட்டால், தான் சுந்தரமூர்த்தி முதலியாருடன் பேசியதாக வெளியிட நேருமே என்ற திகிலும் இன்னொரு புறத்தில் வருத்தியது. அவ்வாறு தவித்த வண்ணம் செளந்தர வல்லியம்மாள் டெலிபோனைக் கையிலெடுத்து வைத்துக் கொண்டு, ‘யார் கூப்பிடுகிறது?’ என்று வினவினாள்.

மயிலாப்பூரில் தமது பங்களாவில் இருந்த சுந்தரமூர்த்தி முதலியாரே அப்போது டெலிபோன் வழியாய்ப்பேச எத்தனித்தவரென்பது நாம் கூறாமலேயே விளங்கி இருக்கும். அவர் உடனே மறுமொழி கூறத்தொடங்கி, ‘யார் அது? புஷ்பாவதியா?” என்று நயமாகவும் அன்பாகவும் வினவினார்.

அவரது குரலைக்கேட்கும்போதே செளந்தரவல்லியம்மாளது தேகத்தில் ஆநந்தம் பரவத் தொடங்கியது. உரோமம் சிலிர்த்து உச்சியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தது. இன்பப் பெருக்கினால் தேகம் பரவசமடைந்தது. மூளை சுழல ஆரம்பித்தது. தனக்கு அத்தகைய பேரின்பத்தை உண்டாக்கும் தனது மணவாளர் அப்போது தனக்கருகில் இல்லையே என்றும், இருந்தால் அப்போது அந்தச் சுகம் இன்னும் ஆயிரமடங்கு அதிகமாயிருக்குமே என்றும் நினைத்து ஆவலினாலும் ஆசையினாலும் துடி துடித்தவளாய் மறுமொழி கூறத்தொடங்கி, ‘ஆம்! நான் புஷ்பாவதிதான்’ என்றாள்.

உடனே சுந்தரமூர்த்தி முதலியார், ‘என்ன புஷ்பாவதி: என்னுடைய செல்வச் சீமாட்டியான செளந்தரவல்லியம்மாள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாள்?’ என்று மிகுந்த வாஞ்சையோடு வினவினார். -

அவரது அபாரமான புகழ்ச்சிமொழியைக் கேட்கவே, செளந்தரவல்லியம்மாள் நேராக சுவர்க்க லோகத்தில் நுழைந்து விட்டவள் போல ஒரே ஆநந்தமயமாக நிறைந்து மெய்ம்மறந்து பரவசமடைந்து போனாள். அவர் தன்னிடம் அவ்வளவு இன்பகரமாகப்பேசி முதன் முதலில் கேட்கும் கேள்விக்குத் தான் பொய்யான மறுமொழி கொடுக்கவேண்டி இருக்கிறதே என்ற