பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 செளந்தர கோகிலம்

தவித்து என்னிடம் சதாகாலமும் அதே பேச்சாகப் பேசிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய தாயார் ஏதோ அவசர காரியமாய் பங்களாவைவிட்டு எங்கேயோ போயிருக்கிறார்கள் ஆனாலும், அவர்கள் அடுத்த நிமிஷமே திரும்பி வந்தாலும் வந்து விடலாம். இன்று இரவு பத்துமணி சுமாருக்கு நீங்கள் அவளுடைய சயன அறைக்கு வரும்படிச் செய்வதாக நான் அவளுக்கு உறுதிமொழி கொடுத்திருக்கிறேன். ஆகையால், நீங்கள் எப்படியாவது வந்து என்னுடைய வாக்குறுதியையும் அவளுடைய மனோபீஷ்டத்தையும் பூர்த்திசெய்துவைக்க வேண்டும்’ என்று நிரம்பவும் உருக்கமாக வேண்டிக் கொண்டாள்.

உடனே சுந்தரமூர்த்தி முதலியார் விசனகரமான குரலில் பேசத் தொடங்கி, “அம்மா புஷ்பாவதி நான் உயிருக்குயிராகவும் என் கண்ணாட்டியாகவும் மதித்திருக்கும் செளந்தரவல்லி யம்மாளின் உள்ளம் மகிழ்ந்து குளிரும்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஆசையும் ஆவலும் என் மனசிலும் பிரமாதமாக இருக்கின்றன. ஆனாலும், சில முக்கியமான காரியங்களைக் கருதி நான் இப்போது என்னுடைய ஆசையை அடக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. செளந்தரவல்லியம்மாள் நல்ல தங்கமான குணமுடைய பெண்தான். அதன் அழகுக்கும், நற்குண நல்லொழுக்கத்திற்கும் ஈடு சொல்லத் தகுந்த வேறே பெண் உலகத்திலேயே இருக்காதென்பது நிச்சயமான விஷயம். அதன்மேல் நாம் அற்பமும் குறை கூறுவதற்கில்லை. அதன் அக்காளும், தாயாரும் செய்யும் காரியங்கள் நமக்கும் வெகு சீக்கிரத்தில் தலை குனிவை உண்டாக்கும் போலிருக்கின்றன. அதனால்தான் அந்தப் பங்களாவில் அடிவைப்பதற்கும் கூசுகிறது. உன்னைக்கூட அங்கே அதிகநேரம் நிறுத்திவைப்பது அநுசித மாகத் தோன்றுகிறது. இன்று காலையில் கோகிலாம்பாள் புறப்பட்டு யாரோ சொந்தக்காரருடைய வீட்டுக்கு ஏதோ அவசர காரியமாய்ப் போயிருப்பதாக நீ என்னிடம் சொன்னாய் அல்லவா. ஏற்கெனவே நடந்த பல சம்பவங்களையும் இதையும் எண்ணி என் மனம் நிரம்பவும் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தது. அக்காள் இப்படி இருப்பதைப் பார்க்க, தங்கையும் இப்படித்