பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 செளந்தர கோகிலம்

ஏற்பட்டுவிட்டன. இனி நாங்கள் எங்களுடைய 5 T களுடைய முகத்தில் விழிப்பதற்கே வகை இல்லாமல் போய் விட்டது” என்றாள்.

உடனே புஷ்பாவதி நிரம்பவும் பரிவாகவும் அநுதாபத் தோடும் மறுமொழி கூறத்தொடங்கி, “ஏனம்மா அப்படிச் சொல்லு கிறீர்கள்! நீங்கள் என்ன அப்படிப்பட்ட தலைபோகிற குற்றத்தைச் செய்துவிட்டது. ஒன்றுமில்லையே. உண்மையில் நடந்த சங்கதியைத் தக்க சமயத்தில் எடுத்துச் சொல்லத் தவறிப் போய் விட்டீர்கள். அதைத்தான் உங்கள் குற்றமாகச் சொல்ல வேண்டும். மற்றபடி நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள். திருடி விட்டீர்களா கொலை செய்து விட்டீர்களா அல்லது செய்யத் தகாத வேறு காரியத்தைச் செய்து விட்டீர்களா நீங்கள் ஏதோ பெருத்த தவறைச் செய்து விட்டதாக ஒரு பொய்த் தோற்றம் ஏற்பட்டுப் போய் விட்டதே தவிர வேறொன்றுமில்லை’ என்றாள்.

பூஞ்சோலையம்மாள், “ஆமாம்மா! அது பொய்த் தோற்ற மென்பது உங்களுக்கு மாத்திரந்தானே தெரியும். மற்ற ஜனங்களெல்லோரும் அதை நிஜ மென்றுதானே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்,’ என்றாள்.

புஷ்பாவதி, “இப்பொழுதுதான் என்ன மோசம் முழுகிப் போய்விட்டது. நாளைய தினம் காலையில் உங்களுடைய நெருங்கிய பந்து யாரையாவது வரவழைத்து அவரிடம் விஷயங் களையெல்லாம் வெளியிட்டு, இப்போது இங்கே வந்துவிட்டுப் போன ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் அவர் போய் உண்மையான வரலாற்றைச் சொல்வதோடு, அதை நீங்கள் இன்ன காரணத்தினால் இப்போது வெளியிடவில்லை என்பதையும் தெரிவித்துவிட்டு வரும்படி செய்துவிட்டால் எல்லாம் சரியாய்ப் போகிறது. யாரும் அதைப்பற்றி சம்சயம் கொள்ளமாட்டார்கள்’ என்றாள்.

பூஞ்சோலையம்மாள் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தனை செய்த பின், “ஆம், நீங்கள் சொல்வது நல்ல காரியமென்றுதான் படுகிறது. ஆனால் இன்னொரு விஷயம் இருக்கிறதல்லவா! இந்தக் கலியாணம் நிறைவேறாதிருக்கையில், அந்த மனிதர் அவ்வளவு தூரம் உரிமை பாராட்டிக் கோகிலாவுக்குக் கடிதம் எழுதியதும்,