பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 செளந்தர கோகிலம்

சத்திரத்தையர், “அது அவர்களைக் கேட்டால்தான் தெரிய வரும். அவர்கள் இருவரும் தங்கமான குணமும், எந்த மனிதரோடும் லலிதமாகவும் குழந்தைகள் போலவும் அத்யந்த பிரியத்தோடும் பேசுவார்கள். அவர்கள் அதிதி பூஜைக்காக வந்து இதோ வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் அதிதி பூஜை செய்தபிறகுதான் வீட்டுக்குப் போய் போஜனம் செய்வார்கள். இன்னமும் கொஞ்ச நேரத்தில் நீங்கள் அவர்களோடு பேசுவீர்கள். அப்போது கேட்டுப் பாருங்களேன்’ என்றார்.

அப்பொழுது அவர்களது போஜனமும் முடிவுற்றது. இருவரும் எழுந்து கையலம்பிக் கொண்டார்கள். உடனே சத்திரத்தையர் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியில் சென்று சத்திரத்திற்கு எதிர்த்தாற்போல இருந்த ஒரு மண்டபத்திற்குப் போய் அவ்விடத்தில் போடப்பட்டிருந்த விசிப்பலகையின் மீது உட்கார வைத்தார். அவர்கள் வெளியில் வந்ததைக் கண்டவுடனே, திண்ணைக்கோடியில் உட்கார்ந்து கொண்டிருந்த அதன் சொந்தக்காரரும், சுமார் ஒன்றரை வயதடைந்த ஒர் ஆண் குழந்தையைக் கையில் வைத்திருந்த அவரது பத்தினியும் குபிரென்று திண்ணையை விட்டுக் கீழே இறங்கினர். அந்தப் பெண் சுமார் இருநூறு ரூபாய் பெறத் தக்கதும், தகத்தகாயமாக மின்னியதுமான ஜரிகைச் சேலையையும், பாதாதிகேசம்வரையில் வைர ஆபரணங்களையும் அணிந்து கந்தருவ ஸ்திரீ போலக் காணப்பட்டாள். அவளது குழந்தையின் மேலும் சிறந்த ஆபரணங்கள் நிறைந்திருந்தன. அந்த அம்மாளினது புருஷனுக்குச் சுமார் முப்பத்தைந்து வயதிருக்கலாம். அவர் மகா மெல்லியதாகவும், தும்பைப்பூவிலும் அதிக வெண்மையாக சலவை செய்யப்பட்டும், ஜிலுஜிலென்று மின்னிய தங்க ஜரிகைகள் நிறையப்பெற்றுமிருந்த மலையாளத்து ஜரிகை வஸ்திரங்களை அணிந்துகொண்டு, காதில் கடுக்கன், கையில் பத்து விரல்களிலும் மோதிரங்கள், இடுப்பில் தங்க அரைஞாண், கழுத்தில் நவரத்னங்கள் இழைத்த ஒற்றை உருத்திராrம் முதலிய ஆபரணங்களைத் தரித்திருந்தார். சிறிது தூரத்தில் இருந்த ஒரு தவசிப் பிள்ளை தனது கையில் ஒரு சிறிய வெள்ளித் தாம்பாளத்தில் அதிதி பூஜைக்குத் தேவையான சுமார் 10